இலங்கை ஒற்றையாட்சி அரசின்

புலனாய்வுப் பொலிஸார் கண்காணிப்பதாக முறைப்பாடு

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத் தலைவி தகவல்
பதிப்பு: 2020 ஒக். 01 21:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 01 23:17
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
போரின் போது இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்டடவர்கள் தொடர்பாகப் போராட்டம் நடத்தி வரும் உறவினர்கள், நண்பர்கள் இலங்கைப் புலனாய்வுத் துறையினரால் கண்காணிக்கப்படுவதாக முறையிடப்பட்டுள்ளது. தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். நீதிகோரி முல்லைத்தீவில் போராட்டம் ஒன்றை நடத்தியதால் நேற்று முன்தினம் இரவு 8.45க்கு தனது வீட்டுக்கு வந்த புலனாய்வுத்துறை அதிகாரிகள் தமது போராட்டம் தொடர்பான தகவல்களைத் தன்னிடம் இருந்து பெற்றதாக மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
 
முல்லைத்தீவில் இரவு நேரத்தில் வீடுகளுக்கு வரும் புலனாய்வுப் பொலிஸார் தமது போராட்டம் தொடர்பாகக் கேட்டு அச்சுறுத்துவதைக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கம் இன்று வியாழக்கிழமை துக்க தினம் அனுஸ்டித்து கறுப்புக் கொடிகளுடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்தப் போராட்டத்தின்போது அதிகளவான புலனாய்வுப் பொலிஸார் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைப் படம் மற்றும் காணொளி எடுத்து அச்சுறுத்தியதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

போரில் ஏராளமான சிறுவர்கள் கொல்லப்பட்டதாலேயே இன்றைய சிறுவர் தினத்தை துக்க நாளாக அனுஷ்டித்ததாகவும் இதனாலேயே புலனாய்வுத் துறையினர் தம்மைக் கண்காணித்திருக்கலாமெனவும் அவர் கூறினார்.

பாரிய அச்சறுத்தல், மிரட்டல்கள் மத்தியில் காணாமல் ஆக்கப்ட்ட தமது பிள்ளைகளைத் தேடியும் நீதிகோரியும் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்திய வருவதாகவும் இவ்வாறான அச்சறுத்தல்கள் தொடர்பாக இலங்கைப் பொலிஸாரிடம் முறையிட்டுப் பயனில்லையெனவும் அவர் கூறினார்.