இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவர் இரு முறை போட்டியிடலாம் என்ற அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலிலும் ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டபாய ராஜபக்சவே போட்டியிடுவாரென அவர் கூறினார்.
பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்று அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கவுள்ளமை தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் பலருக்கும் உடன்பாடு இல்லையென உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அதன் பிரதிபலிப்பாகவே கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என்ற அறிவிப்பும் வெளி வந்ததாகக் கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
இதேவேளை, பசில் ராஜபக்ச நாளை வியாழக் கிழமை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவுள்ளார். அதையடுத்து அமைச்சராகவும் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
இலங்கைத் தேர்தல்கள் ஆணைக்குழு பசில் ராஜபக்வின் பெயரை இலங்கை வர்த்தமானியில் இன்று புதன் கிழமை வெளியிட்டுள்ளது. தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகிப் பசில் ராஜபக்சவுக்கு இடமளித்தமை குறிப்பிடத்தக்கது.