ராஜபக்ச அரசாங்கத்தின்

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 வாக்குகளினால் தோல்வி

மகிந்த தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராகவே சமர்ப்பிக்கபட்டிருக்க வேண்டுமென்கிறார ரணில்
பதிப்பு: 2021 ஜூலை 20 23:20
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 23 00:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்தின் எரிசக்தி அமைச்சர் உதயன் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும் ஆதரவாக 81 வாக்குகளும் பெறப்பட்டன. இன்று செவ்வாய்க்கிழமை இந்தப் பிரேரணை தொடர்பான விவாதம் நடைபெற்றுப் பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி ஆகிய கட்சிகளுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்கவும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.
 
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தாலும் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட முறை தவறானதென ரணில் விக்கிரமசிங்க விவாதத்தின்போது எடுத்துக் கூறினார்.

எரிபொருள் விலை உயர்வை தனியே அமைச்சர் உதய கம்மன்பில மாத்திரம் தீர்மானித்திருக்க முடியாதெனவும் ஆகவே பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜே.வி.பி உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்காவும் இதே கருத்தைக் கூறினார்.