பொருளாதார நெரக்கடி, விலைவாசி உயர்வுகள்-
நிருபர் திருத்தியது
ஆசிரியர் திருத்தியது
உறுதிப்படுத்தப்படக்கூடியது
ஆசிரியபீட அங்கீகாரம்
மொழி திருத்திய பதிப்பு
தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக கொழும்பில் உள்ள உலக வங்கி அதிகாரிகள் குழு ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துள்ளது. உதவித் தொகையாக அறுநூறு மில்லியின் அமெரிக்க டொலர் வழங்கப்படுமென உலக வங்கி அதிகாரிகளினால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக முதற்கட்டமாக நாநூறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமென உலக வங்கியின் இலங்கைக்கான கொழும்பில் உள்ள நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொள்பிட்டியில் உள்ள ஜனாதிபதி செயலகம் இன்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, உலக வங்கியிடம் இருந்து மேலும் நிதியுதவிகள் கிடைக்குமென எதிர்ப்பார்ப்பதாக கொழும்பில் உள்ள நிதியமைச்சின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதியுடனான சந்திப்பில் நிதியமைச்சர் அலி சப்ரி, நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.
இதேவேளை. சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பான அதிகாரபூர்வ அறிப்பை இன்னமும் வெளியிடவில்லை. அமெரிக்காவுக்குச் சென்றிருந்த நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் தொடர் சந்திப்புக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.