ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கத்துக்குள்

முரண்பாடுகள் அதிகரிக்கின்றதா? அமைச்சர்களும் மோதல்

மகிந்தவைப் பதவி விலக்கமாட்டேன் என்கிறார் கோட்டா
பதிப்பு: 2022 ஏப். 28 10:48
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மே 09 13:33
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையச் செய்திகள் கூறுகின்றன. இன்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூத்த உறுப்பினர் டளஸ் அழிகபெருமா உள்ளிட்ட சிலருடன் முரண்பட்டனர். ஆனால் மகிந்த ராஜபக்ச தலையிட்டு அதனைத் தடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 
முக்கியமான இராஜதந்திரி ஒருவரின் ஆலோசனைக்கு அமைவாகவே மகிந்த ராஜபக்சவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் முடிவை கோட்டாபய மாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரே ஆளும் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. இதேவேளை, கொழும்பில் உள்ள இராஜதந்திரிகள் சிலர் இன்றிரவு முக்கியமான சிங்கள அரசியல் தலைவர்கள் பலரை இரகசியமாகச் சந்தித்து உரையாடியதாகவும் உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவியளிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் பேசப்பட்டதாகவும் தெரியவருகின்றது.