கொழும்புத்துறைமுகத்துக்கு வருகை தந்த

பாகிஸ்தான் கப்பலுடன் இலங்கைக் கடற்படை பயிற்சியில் ஈடுபடாதென அறிவிப்பு

கொழும்புக் கடற்பிரதேசத்துக்கு அப்பால் பயிற்சியென வெளியான செய்திகளுக்கு மறுப்பு
பதிப்பு: 2022 ஓகஸ்ட் 14 08:45
புலம்: முல்லைத்தீவு
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 20 16:16
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத்தீவின் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்துள்ள பி.என்.எஸ் தைமூர் எனப்படும் பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் இணைந்து இலங்கைக் கடற்படை போர் பயிற்சிகளில் ஈடுபடாதென இலங்கைக் கடற்படை தெரிவித்துள்ளது. சென்ற பன்னிரெண்டாம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தந்த குறித்த கப்பல் பதினைந்தாம் திகதி திங்கட்கிழமை இலங்கையில் இருந்து புறப்படவுள்ளது. இந்த நிலையில். குறித்த பாகிஸ்தான் கப்பலுடன் இலங்கைக் கடற்படை பயிற்சியில் ஈடுபடுமென செய்தி இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வெளியான செய்தியை இலங்கைக் கடற்படை மறுத்துள்ளது.
 
கொழும்புக்கு அப்பால் உள்ள கடற் பிரதேசத்தில் இந்த கப்பலுடன், இலங்கையின் கடற்படை அதிகாரிகள் போர் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவே செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனாலும் இலங்கைக்கு அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு கடற்படை கப்பல்கள், இலங்கையில் இருந்து வெளியேறும் போது இலங்கை கடற்படையுடன் கூட்டு பயிற்சிகளில் ஈடுபடுவது வழமையான நடவடிக்கை என்றும் இலங்கைக் கடற்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனக் கப்பலைத் தனது கடற் பிரதேசத்தில் நிறுத்த இலங்கை அரசாங்கம் அனுமதித்ததை அடுத்து, எழும் எந்தவொரு சவால்களையும் சமாளிக்க இந்தியா தயாராக இருப்பதாக இந்தியாவின் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், இந்தியக் கடற்படை எந்தவிதமான சவால்களையும் எதிர்கொள்ளும் என்றும். மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் கூறினார்.