உள்ளூராட்சி சபைத் தேர்தல்-

ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றிப் புதியவர்களை நியமிக்க அரசாங்கம் முயற்சி- பீரிஸ் குற்றச்சாட்டு

அரசியல் யாப்புக்கு முரண் என்றும் கூறுகிறார்
பதிப்பு: 2023 ஜன. 23 22:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 27 21:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் கடந்த இரண்டரை மாதங்களில் ஏழு தடவைகள் முயற்சி மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்றிப் புதிய உறுப்பினர்களை நியமிக்க அரசாங்கம் முற்படுவதாகவும், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் ஆணைக்குழு உறுப்பினர்களை மாற்ற முடியாதெனவும் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பீரிஸ், அது அரசியல் யாப்புக்கு முரணானது என்றும் கூறினார்.
 
உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்துவதில் தற்போதைய ஆணைக்குழு உறுப்பினர்கள் உறுதியாக இருக்கின்றனர். இதனால் மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி தேர்தல் நடைபெறும் என்பதில் சந்தேகம் இல்லை எனவும் அவர் கூறினார்.

தேர்தல் தினத்தை பெயரிடும் போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அங்கு இல்லை என அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுத் தவறு என்றும் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.