இலங்கை ஒற்றையாட்சி அரசில்

பதின்மூன்றுக்கு மகாநாயக்கத் தேரர்கள் எதிர்ப்பு- இலங்கைத்தீவைப் பிளவுபடுத்தும் என்று கடிதம்

இனமோதல்களையும் உருவாக்குமாம்
பதிப்பு: 2023 பெப். 02 23:14
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 12 10:56
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
புதின் மூன்றாவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கைத்தீவின்; சுதந்திரம், ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பாக பாரிய பிரச்சினைகளுக்கு வழி வகுக்குமென மகாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஏல்லே குணவன்ச தேரர் உள்ளிட்ட சில முக்கியமான மூத்த தேரர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை மகாநாயக்கத் தேரர்களும் கடிதம் எழுதியுள்ளனர்.
 
புதின் மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்து மக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் இறைமையை மீறும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அமைந்துள்ளதாக மகாநாயக்கத் தேரர்கள் கடிதத்தில் கூறியுள்ளனர். பொலிஸ் - காணி அதிகாரங்கள் உட்படப் பல அதிகாரங்கள் பதின்மூன்றாவது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ளதால் இலங்கைத்தீவை அது பிளவுபடுத்தும்.

இனங்களிடையே இனமோதலை அது உருவாக்கும் என்று மகாநாயக்கத் தேரர்கள் தமது கடிதத்தில் கூறியுள்ளனர். இக் கடிதம் ஊடகங்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.