அமெரிக்க - இந்திய போட்டிக்குள் இலங்கை!

ஸ்ராலினுக்கு நோகாமல் பேசிய கஜேந்திரகுமார்

ஜெயலலிதாவின் இன அழிப்புத் தீர்மானத்தைக் கூட எடுத்துக் கூற விரும்பாத முன்னணி
பதிப்பு: 2025 டிச. 22 10:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 28 07:28
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lk
#government
#lk
#tamil
#tamil
#nadu
#us
இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு. ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது. அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக "இலங்கை அரசு" என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று உதவியளிக்கும். 2009 இல் கூட இதுதான் நடந்தது. அதாவது, கட்சி அரசியல் குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் சாணக்கியம், ரணில் விக்கிரமசிங்கவின் உலக அரசியல் அறிவு, சஜித் பிரேமதாசாவின் அரசியல் நுட்பம் என்ற கோணங்களில் இந்த நாடுகள் உதவியளிப்பதில்லை.
 
2015 இல் உருவான புவிசார் அரசியல் பின்னணிகளை மையப்படுத்தி ரணில் மேற்கொண்ட நகர்வு ஜெனீவாவில் ஈழத்தமிழர் விவகாரத்தை மீள் நல்லிணக்கம் என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வந்தது. இனப்பிரச்சினை விவகாரத்தை வெறுமனே மனித உரிமைகள் விவகாரமாக அது மடைமாற்றியது

இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பு முறைமை (System) பிழையாகத் தெரிவது தமிழர்களுக்குத் தான். அதில் உண்மை உண்டு.

ஆனால், புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத்தீவு என்ற ஒரு நாடு (அரசு) அமெரிக்க, இந்திய, சீன அரசுகளுக்கு அவசியமானது.

அந்த அடிப்படையில் ஏட்டிக்குப் போட்டியாக "இலங்கை அரசு" என்ற கட்டமைப்பில் எவர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த நாடுகள் நான் முந்தி நீ முந்தி என்று உதவியளிக்கும். 2009 இல் கூட இதுதான் நடந்தது.

அதாவது, கட்சி அரசியல் குறிப்பாக அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் சாணக்கியம், ரணில் விக்கிரமசிங்கவின் உலக அரசியல் அறிவு, சஜித் பிரேமதாசாவின் அரசியல் நுட்பம் என்ற கோணங்களில் இந்த நாடுகள் உதவியளிப்பதில்லை.

மேலும் அழுத்திச் சொல்வதானால், அநுரகுமார திஸாநாயக்கவின் இடத்தில் இப்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் உதவிகள் கிடைத்திருக்கும்.

ஆகவே, டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வெளிநாடுகள் உதவியளிப்பதை அநுரகுமார திஸாநாயக்கவின் அரசியல் நுட்பம் அல்லது ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் அரசியல் காய்நகர்த்தல் என்றெல்லாம் மிகைப்படுத்திப் பேசுவதை அமைச்சர்கள் நிறுத்த வேண்டும்.

ஆனால், அவ்வப்போது பதவியில் இருக்கும் ஆட்சியாளர்கள் சமகால புவிசார் அரசியல் போட்டிச் சூழலை இனம்காணக்கூடிய ஆற்றல் உள்ளவர்களாக இருப்பது அவசியம்.

குறிப்பாக, மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய புவிசார் அரசியல் பின்னணிகளை சரியாகப் பயன்படுத்தினார். அதாவது, விடுதலைப் புலிகளை அழிக்க அமெரிக்கா தான் பொருத்தமான நாடு என்பதை மகிந்த தெரிந்து கொண்டார். இதனால் 2009 இல் போர் இல்லாதொழிக்கப்பட்டது.

2015 இல் உருவான புவிசார் அரசியல் பின்னணிகளை மையப்படுத்தி ரணில் மேற்கொண்ட நகர்வு ஜெனீவாவில் ஈழத்தமிழர் விவகாரத்தை மீள் நல்லிணக்கம் என்ற சொல்லாடலுக்குள் கொண்டு வந்தது. இனப்பிரச்சினை விவகாரத்தை வெறுமனே மனித உரிமைகள் விவகாரமாக அது மடைமாற்றியது.

2020 கோட்டாபய எடுத்த நகர்வும் 2022 இல் ரணில் ஜனாதிபதியாக வந்த போது மேற்கொண்ட நகர்வுகளும், அமெரிக்க - இந்திய அரசுகளை சமாந்தரமாக கையாளும் அணுகுமுறைக்கு வழி வகுத்தது.

அதேநேரம், சீனாவுக்குரிய இடமும் இலங்கையில் சுதந்திரமாக உண்டு. இந்த அரசியல் தேவை, சிறிமா - ஜேஆர் காலம் முதல் உண்டு. இது அமெரிக்க இந்திய அரசுகளுக்கு புரியாத புதிரும் அல்ல.

இதையே தற்போது அநுரகுமார திஸாநாயக்கவும் கையாளுகிறார். ஆகவே இது ஒன்றும் பெரிய இராஜதந்திரம் அல்ல.

குறிப்பாக இலங்கையின் சிஸ்ரம் (System) என்பது எப்போதும் அமெரிக்கச் சார்புத் தன்மை கொண்டது தான்.. அதன் பின்னர் தான் இந்திய, சீன உறவு என்பது.

அநுர புரிந்துகொண்டார் என்பதை விடவும் வடக்கு கிழக்கு தமிழர்களை கையாளும் இராணுவப் பொறிமுறை (Military Mechanism) அநுரவுக்கு அறிவுறுத்தியுள்ளதன் பிரகாரம், அநுரவின் தற்போதைய அணுகுமுறையை அவதானிக்க முடியும்

ஆனாலும், ஈழத்தமிழர் விவகாரங்களில் மாத்திரம் அமெரிக்கா இன்றுவரை கூட இந்திய மத்திய அரசு எடுக்கும் நிலைப்பாட்டோடு ஒத்துழைக்கிறது.

குறிப்பாக, சீனா - ரசியாவை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய அரசுகளிடையே பனிப்போர் நிலவினாலும், தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டோடு அமெரிக்கா ஒத்துழைக்கிறது. அதாவது மோடி இருந்தால் என்ன ராகுல் காந்தி இருந்தால் என்ன 13 ஆவது திருத்தச் சட்டமே தீர்வு என்பது இந்திய அரசின் நிலைப்பாடு என்பது அமெரிக்காவுக்குத் புரியும்.

வடக்கு கிழக்கில் உள்ள இயங்கைத் துறைமுகங்களை பங்கு போடுவதிலும் அமெரிக்க - இந்திய அரசுகள் ஒரு புள்ளியில் நிற்கின்றன.

இதனை அநுரகுமார திஸாநாயக்க நன்கு விளங்கிக் கொண்டு காய்நகர்த்துகிறார். அநுர புரிந்துகொண்டார் என்பதை விடவும் வடக்கு கிழக்கு தமிழர்களை கையாளும் இராணுவப் பொறிமுறை (Military Mechanism) அநுரவுக்கு அறிவுறுத்தியுள்ளதன் பிரகாரம், அநுரவின் தற்போதைய அணுகுமுறையை அவதானிக்க முடியும்.

அதேநேரம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் அமெரிக்க பின்புலம் கொண்ட கட்சி என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் அதேநேரம் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை கஜேந்திரகுமார் எதிர்ப்பதில்லை. ஏனெனில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு ம் அவசியமான ஒன்று. இது கஜேந்திரகுமாருக்கும் நன்கு தெரியும்.

இப்போது இவர்கள் தமிழ் நாட்டுக்குச் சென்றிருப்பது கூட அமெரிக்க - இந்திய அரசுகளின் புவிசார் தேவையின் அடிப்படைகளை மையம் கொண்டதாகக் கூட இருக்கலாம்.

தற்போது குழப்பமடைந்துள்ள உலக அரசியல் ஒழுங்கு நிலையில் அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுக்கு இலங்கை போன்ற சிறிய நாடுகள் தேவைப்படுகின்றன.

அந்த அடிப்படையில் இந்தோ - பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு இந்தியாவுடன் அமெரிக்கா முரண்பாட்டில் உடன்பாடாக பயணிக்க வேண்டிய அவசியம் உண்டு.

இந்தியாவின் ரசிய - சீன கூட்டு அமெரிக்காவுக்கு ஒத்துவராத சூழலிலும், இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் இந்தியாவுடன் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்து நிற்க வேண்டிய அவசியம் அமெரிக்காவுக்கு உண்டு.

ஆகவே, இலங்கையை மையப்படுத்தி அமெரிக்க - இந்திய உறவு இருக்க வேண்டுமானால், முதலில் வடக்கு கிழக்கில் அமைதி நிலவ வேண்டும். இதனால் புலிகள் இயக்கமும் அழிக்கப்பட்டது.

ஆனாலும், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் அந்த அமைதி நிலவாத ஒரு பின்னணியில், இலங்கை ஒற்றை ஆட்சி அரசு என்ற கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய கட்டாயச் சூழல் அமெரிக்க - இந்திய அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளன.

தமிழரசுக் கட்சி ஏற்கனவே அமெரிக்க இந்திய அரசுகளின் கொள்கைக்கு ஏற்ப இணங்கிச் செல்லக் கூடிய பக்குவத்துக்குள் நுழைந்துவிட்டது .

கஜேந்திரகுமார் சற்று வித்தியாசமாக செயற்பட்டு வருவதால், அமெரிக்க - இந்திய நலன் சார்ந்து செயற்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் அவ்வப்போது வழங்கப்பட்டன.

ஆனாலும் தோ்தல் அரசியலை மையமாக் கொண்டு தூய தமிழ்த் தேசியம் பேசுவது போன்ற தோற்றத்தை கஜேந்திரகுமார் காண்பித்து வருகிறார்.

இதன் பின்னணியில் கஜேந்திரகுமாருக்கும் அவரது கட்சிக்கும் நோகாமல் நகர்த்தப்படும் அரசியல் தான், இந்த தமிழ் நாட்டுப் பயண ஏற்பாடு.

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் இந்த அணுகுமுறைக்குள் கஜேந்திரகுமார் சென்றிருக்கத் தான் வேண்டும்.

ஆகவே, அமெரிக்க இந்திய அரசுகள் தமது புவிசார் அரசியல் போட்டிக்குள் ”இலங்கை அரசு” என்ற கட்டமைப்பை தங்கள் பிடிக்குள் வைத்திருக்கும் நோக்கில் இந்த காய் நகர்த்தல்களை செய்கிறார்கள் என்பது புரிகிறது.

தமிழ் நாட்டில் ஸ்ராலின் ஆட்சியில் இருந்தால் என்ன விஜய் ஆட்சிக்கு வந்தால் என்ன, ஈழத்தமிழர் விவகாரத்தில் 13 என்ற இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டை ஏற்றுத் தான் ஆக வேண்டும். இவை எல்லாவற்றையும் உள்வாக்கியே கஜேந்திரகுமார் சென்னைக்குச் சென்றிருக்கிறார்.

அதேநேரம், அமெரிக்க - இந்திய அரசுகள் தயாரிக்கும் தமிழர் விவகார ஏற்பாடுகளுக்கு அநுரகுமார திஸாநாயக்கவும் ஒரு கட்டத்தில் அடங்கிச் செல்லவில்லை என்றால், அவரது ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டமும் அமெரிக்க - இந்திய அரசுகளிடம் இல்லாமில்லை.

பாகிஸ்தான் - பங்களாதேஷ் போன்ற நாடுகளிலும் தமக்கு ஏற்றமாதிரியான அரசியலைத்தான் அமெரிக்க - இந்திய அரசுகள் தற்போது கையாண்டு வருகின்றன.

அதேநேரம், ரசிய - சீன கூட்டை இந்தியா வளர்த்து வருகின்றது என அமெரிக்கா ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மையமாக் கொண்டு அநுர அரசாங்கம் கையாளும் அணுகுமுறை, ரணில் என்ற தற்காப்பு அரசியல் சாணக்கியனால் மடைமாற்றப்படக் கூடிய ஆபத்துகளும் இல்லாமலில்லை.

ஆகவே, 2009 இற்குப் பின்னரான சூழலில் சரியான உத்தி வகுப்படாத நிலையில், தவறான அரசியல் வியூகத்துடன் தொடர்ந்தும் பயணிப்பதால், கையாளப்படும் சக்தியாக மாத்திரமே தமிழ்த்தரப்பு விளங்குகிறது.

பொருத்தமான பொறிமுறை ஒன்றின் கீழ் தமிழ்த்தரப்பு ஒருமித்த குரலில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்சி அரசியலுக்கு அப்பால், உரிய முறைப்படி இயங்கியிருந்தால், தற்போதைய புவிசார் அரசியல் - பொருளாதார போட்டிச் சூழலில் ஒரு அரசு அற்ற சமூகமாக குறைந்தபட்ச அரசியல் முன்னேற்றங்களை கண்டிருக்கலாம்.

இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை நடந்தால், சுயநிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழும். ஆகவே "முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்" என்ற ஆழமான சர்வதேசக் கருத்தியலை கஜேந்திரகுமார் உள்வாங்கிவிட்டார் என்பது இங்கே பட்டவர்த்தனம்

இப்போது கூட சஜித், ரணில், அநுர என்று உள்ளக அரசியல் முரண்பாடுகள் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டங்கள் சிங்கள அரசியல் பரப்பில் ஆழமாக வேரூன்றி வருகின்றன.

அது சாத்தியமா இல்லையா என்பது வேறு. ஆனால் தென்பகுதியின் அந்த குழப்பமான அரசியல் பின்னணிகளைக் கூட தமக்குச் சாதகமாக மாற்றும் நுட்பங்கள் எதுவும் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் இல்லையே!

வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சி முறையில் ஈழத்தமிழர்களின் சுயநிரிணய உரிமை அங்கீகரிக்கப்படாது. ஏனெனில் சமஸ்டிக் கோட்பாடு பல வகைப்பட்டது. அமெரிக்காவின் உள்ள முழுமையான சம்ஸ்டி ஆட்சியை முறை கஜேந்திரகுமார் கோருகிறாரா அல்லது இந்திய சமஸ்டி முறைமையை கேட்கிறாரா?

எதுவானலும், "ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை" என்ற கோட்பாட்டில் இருந்து கஜேந்திரகுமார் விலகிவிட்டார் என்பதும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணையை தவிர்த்துள்ளார் என்பதும் இங்கே பட்டவர்த்தனம்.

இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை நடந்தால், சுயநிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழும்.

ஆகவே "முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும்" என்ற ஆழமான சர்வதேசக் கருத்தியலை கஜேந்திரகுமார் ஏற்றுள்ளார் என்பது இங்கே பகிரங்கமான உண்மை.

குறிப்பாக, தமிழக சட்ட சபையில் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றிய இன அழிப்புத் தீர்மானத்தை முன்கொண்டு சொல்ல வேண்டும் என கஜேந்திரகுமார் ஸ்ராலினிடம் கேட்கவில்லை. கட்சி வேறாக இருந்தாலும் தீர்மானம் என்பது தமிழக அரசினுடையது. அத் தீர்மாதை அப்போது ஸ்ராலின் எதிர்க்கவில்லை என்பது அவதானிக்கத்தக்கது.