தமிழா் தாயகமான வவுனியா-

வெடுக்குநாறி மலைக்குச் சென்று வழிபடுவதை இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் தடுக்க முடியாது- மக்கள் ஆர்ப்பாட்டம்

புத்தர் சிலை வைப்பதுதான் நோக்கமா எனவும் கேள்வி
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 21 14:45
புதுப்பிப்பு: செப். 02 16:24
main photo main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கொழும்பை மையப்படுத்திச் செயற்பட்டு வரும் இலங்கைத் தொல்லியல் திணைக்களம் தமிழர் தாயகமான வவுனியா நெடுங்கேணி ஒலுமடு வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிசிவன் ஆலயத்தை கைப்பற்றவுள்ளமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெருமளவு மக்களும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும் பங்குபற்றினர். கடந்த ஆடி அமைவாசை தினம் அன்று வழிபாடுகளுக்குச் சென்ற மக்களை இலங்கைத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள, இலங்கைப் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தடுத்து நிறுத்தியிருந்தனர். ஆனாலும் இலங்கைப் பொலிஸாருக்கு நிலைமையைத் தெளிவுபடுத்திய மக்கள், பின்னர் வெடுக்குநாறி மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
 
எனினும், இலங்கைத் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தொடர்ச்சியாகத் தடை விதித்து வருகின்றனர். வெடு்க்குநாறி மலைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டாலும் அங்குள்ள ஆதிசிவன் ஆலயத்தை புணர்நிர்மானம் செய்யக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு வெளியிட்டே மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், இலங்கைத் தெல்பொருள் திணைக்களத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

தமது பாரம்பரிய வெடுக்குநாறி மலையில் புத்தர் சிலையை வைக்கும் நோக்கில் அதிகாரிகள் செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சந்தேகம் வெளியிட்டனர்.

தமது பூர்வீக நிலத்திற்குச் சென்று வருவதை இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் தடுக்க முடியாது என்றும் பௌத்ததேசிய பேரினவாத நோக்கில் செயற்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.

வவுனியா நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என இலங்கைத் தொல்பொருட் திணைக்களம் எச்சரிக்கை விடுத்தமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கண்டனம் வெளியிட்டிருந்தார்.

ஆனாலும், தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.