வடமாகாணம் மன்னார்

போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 102 மனித எலும்புக்கூடுகள் மீட்பு- அகழ்வுப் பணி தொடர்கிறது

நீதிமன்ற உத்தரவுடன் பொதிகள் பாதுகாப்பு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 27 14:50
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 27 15:34
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதோச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து 102 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 95 மனித எலும்புக்கூடுகள் வெளியே எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட பின்னர் சுமாா் ஐநுாறு பைகளில் பொதியிடப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை 58 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணி இடம்பெறுகின்றது. வளாகத்தின் மைய பகுதியில் அடையாளமிட்ப்பட்டுள்ள மனித எலும்புக் கூடுகள் மாத்திரமே தற்போது மீட்கப்பட்டு வருகின்றன.
 
மீட்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்ட 95 மனித எலும்புக்கூடுகளும் மன்னார் நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக பைகளில் இலக்கிடப்பட்டு பொதிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, மன்னாரில் மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதால், அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு ஏற்ற முறையில் வளாகத்தின் முன் பகுதி முழுவதும் தார்ப்பால் இடப்பட்டு மூடப்பட்டுள்ளன.

சட்ட மருத்துவ அதிகாரி ராஜபக்ச தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவா குழுவினர் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் நாநுாற்றி நாற்பது பொதிகளில் அடைக்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் ஏலவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.