உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை

ஸர்க்கான் குறித்து ஜனவரியில் தகவல் வழங்கப்பட்டது-உலமா சபை

தமிழ்­நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்­புடன் இணைந்து இயங்கியதாகவும் தெரிவிப்பு
பதிப்பு: 2019 ஜூன் 12 10:16
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 13 00:32
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஸர்க்கான் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு குறித்து பல தட­வைகள் இலங்கைப் பாது­காப்பு உயர் அதிகாரிகளுக்குத் தெரி­வித்­திருந்ததாகவும் ஆனாலும் நடவடிக்கை எதுவுமே எடுக்கப்படவில்லையென்றும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி இலங்கை நாடாளுமன்றத் தெரி­வுக்­குழு முன்­னி­லையில் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்தள்ளார். நேற்றுச் செவ்வாய்க்கிழமை அளித்த வாக்குமூலத்தில் ஸஹ்ரான், அவர் சார்ந்த குழுவின் செயற்­பா­டு­கள் எதுவுமே ஏனைய முஸ்லிம் மக்களுக்குத் தொடர்ப்பில்லாதவையெனவும் இலங்கைப் பாதுகாப்புத் தரப்புக்கு கூறியிருந்ததாக அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
 
இலங்­கையில் இருந்து சிரி­யா­விற்கு முப்­பது, நாற்­பது குடும்­பங்கள் சென்று வந்தமை தொடர்பாக இனம் காணப்பட்டு அவர்கள் பற்றி விபரங்கள் அடங்கிய இறுவெட்டுக்களை முதலாம் திகதி ஜனவரி மாதம் 2019 ஆம் ஆண்டு அன்று இலங்கைப் பாது­காப்பு செய­லா­ளர் ஹேமசிறி பெர்ணாண்டோவைச் சந்­தித்து கையளித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸர்க்கான் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையொன்றையும் இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் சென்ற ஜனவரி மாதம் கையளித்திருந்ததாகவும் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார்.

ஸர்க்கான் தலைமையிலான தேசிய தவ்ஹித் ஜமாஅத் அமைப்பு தடை செய்யப்பட வேண்டிய அமைப்பு என்றும் ஸர்க்கானுடன் மொத்தம் பன்னிரண்டு அமைப்­புகள் இணைந்து செயற்­பட்­டதாகவும் இந்நதியாவின் தமிழ்­நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்­புடன் இணைந்து இயங்கியதாகவும் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி கூறினார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் ரமழான் மாதத்தில் இரண்­டா­யிரத்திற்கும் அதிகமான முஸ்­லிம்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். ஜிஹாத் புத்­தகம் வைத்­தி­ருந்த குற்­றத்தில் முஸ்லிம் மக்கள் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகவும் மோசமான முறையில் முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் இலங்கை இராணுவத்தால் துன்புறுத்தப்பட்டுமுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை இலங்கை அரசாங்கத்தால் எவ்வாறு இல்லாதொழிக்க முடியுமென அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.

தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் ஸஹ்ரான் ஹாசீம், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி தமது அடிப்படைவாதத்தை ஏற்றுக்கொள்ளச் செய்ததாக கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் அசாத்சாலி தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அவர் சாட்சியமளித்தார். சஹ்ரானின் பேச்சுக்களுக்கு கிழக்கு மாகாண மக்கள் செவிமடுத்து வந்தனர் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு சஹ்ரான் உதவியளித்ததாகவும் அசாத்சாலி கூறினார்.

கிஸ்புல்லா ஸஹ்ரான் ஹாசீமோடு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டு அதன்படி தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகவும் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் பலவற்றுக்கு ஸஹ்ரான் ஹாசீம் காரணமெனவும் அசாத்சாலி மேலும் தெரிவித்தார்.