இந்தோ - பசுபிக் பிராந்தியப் போட்டி

ரஷிய - இலங்கை இராணுவக் கூட்டு ஒத்துழைப்பு ஏற்பாடு

இலங்கையின் உட்கட்டமைப்புக்கு ஜப்பான் - இந்தியா இணக்கம்
பதிப்பு: 2019 ஜூன் 28 21:54
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 30 16:46
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Russia
#Srilanka
#Japan
#India
#2019G20Osakasummit
#Indopacificstrategy
இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த முற்பட்டு வரும் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கையின் உட்கட்டமைப்புளைக் கட்டமைக்க கூட்டாக செயட்படுவது குறித்துக் கலந்துரையாடியுள்ளன. மியன்மார், பங்களாதேஸ், போன்ற நாடுகளிலும் பிராந்திய நலன் சார்ந்து அந்த நாடுகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பேச்சு நடத்தியுள்ளன. ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒசாகா நகரில் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் அபிவிருத்தித் திட்டத்தில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து செயற்படுவதற்கான உடன்படிக்கையில் ஏலவே கைச்சாத்திட்டுள்ளன.
 
இந்த நிலையில், மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை இணைந்து மேற்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை, ரஷிய இராணுவக் கூட்டு ஒத்துழைப்புத் தொடர்பாக ரஷிய கூட்டுப் படைகளின் தலைவரான, ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் இலங்கைப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

மொஸ்கோ நகரில் இந்தச் சந்திப்பு சென்ற புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் கொண்டு இலங்கையோடு சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ரஷியா இலங்கை இராணுவத்துடனான உறவை மேம்படுத்த விரும்பம் தெரிவித்துள்ளது.

மொஸ்க்கோவில் நடைபெறும் இராணுவ கருத்தரங்கில் பங்குகொள்வதற்காகச் சென்ற இலங்கைப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்தன, அங்கு ரஷிய இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைப் படைகளின் அட்மிரல் விஜேகுணரத்ன, அவரது செயலாளர் கப்டன் சமரநாயக்க, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உதவிச் செயலாளர் ஏ.எஸ்.எஸ்.குமார, விங் கொமாண்டர் விஜேசிங்க, ரஷியாவுக்கான தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக உள்ளிட்ட அதிகாரிகள் இலங்கையின் சார்பில் கலந்துகொண்டனர்.

டுஷான்பேயில், ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் சந்தித்துப் பேசியபோது ஏற்பட்ட இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இலங்கைப் படை உயர் அதிகாரிகள் பேசியுள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன.