வடமாகாணம் - யாழ்ப்பாணம்

மயிலிட்டித் துறைமுகத்தில் சிங்கள மீனவர்களின் ஆதிக்கம்

அபிவிருத்தியென்ற பெயரில் தமது கடல் வளம் பறிக்கப்படுவதாகப் பிரதேச மீனவர்கள் ஆதங்கம்
பதிப்பு: 2019 ஜூலை 26 23:19
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 31 06:40
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Jaffna
#myliddyfisheriesharbour
#myliddy
#lastwar
#tamils
#tamilfishermen
#srilanka
#lka
இலங்கை இராணுவத்திடம் இருந்து பொது மக்களிடம் கையளிக்கப்பட்ட யாழ்ப்பாணம் - மயிலிட்டித் துறைமுகம் நூற்று ஐம்பது மில்லியன் ரூபாய்கள் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டுகின்றது. ஆனால் இந்தத் துறைமுகத்தின் பயன்பாடுகள் சிங்கள மீனர்வகளுக்கே அதிகமான நன்மைகளை ஏற்படுத்துமென மயிலிட்டி கடற்றொழிலாளர் சங்கம் கூறுகின்றது. மயிலிட்டிப் பிரதேசத்தில் பொது மக்களுக்குச் சொந்தமான மேலும் பல ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டாலும் பிரதேச மீனர்கள் அதனை முழுமையாகப் பயன்படுத்த முடியாத ஆபத்தான நிலைமை ஏற்படுமென மீனவர்கள் சங்க உப தலைவர் துரைசிங்கம் வினோத்குமார் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.
 
கொழும்பு நிர்வாகத்தை மையமாகக் கொண்ட துறைமுகங்கள் அதிகாரசபையின் கீழ் செயற்படும் மயிலிட்டித் துறைமுகத்தில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் படகுகள் நீண்டகாலமாகத் தரித்து நிற்கின்றன. அந்தப் படகுகள் பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Mayilidy Fisherman-6
சிங்கள மொழி எழுத்துகளுடன் காணப்படும் வள்ளம்

அபிவிருத்தியென்ற பெயரில் தமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதாகவும் மீனவர்கள் கவலைப்படுவதாக வினோத்குமார் கூறினார்.

1990 ஆம் ஆண்டு இங்கிருந்து இடம்பெயர்ந்து சென்று மக்கள் மீண்டும் 2017 ஆம் ஆண்டு இங்கு குடியமர்த்தப்பட்டனர். ஆனாலும் முழுமையாகக் காணிகள் கையளிக்கப்படவில்லை.

இங்கு மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரங்களோ வீட்டு வசதிகளோ ஏனைய கட்டமைப்புகளோ இங்கு முழுமையாக செய்து தரப்படவில்லை. சிறுவர்களுக்கான விளையாட்டு மைதானங்கள், முன்பள்ளி வசதிகளோ எவையும் இதுவரை ஏற்படுத்தித் தரப்படவில்லை.

மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்காக வாழ்வாதார வசதிகளோ உட்கட்டமைப்பு வசதிகளோ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இடப்பெயர்வுக்குப் பின்னர் மற்றவர்களுக்கு முன்னால் கைகட்டிக்கொண்டு நிற்கவேண்டிய நிலையில் மயிலிட்டி மீனவர்களின் நிலைமை காணப்படுகின்றது.

Mayilidy Fisherman-8
சிங்கள மீனவர்களில் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடும் படகுகள்

மயிலிட்டி இலங்கையின் 22 ஆவது துறைமுகமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிங்கள மீனவர்களின் படகுகளும் இங்கு வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் கற்பிட்டி சிலாபம் போன்ற துறைமுகங்களிலிருந்து வரும் மீன்பிடிப் படகுகள் இங்கு வந்து மீன்களை இறக்கிவிட்டு மீண்டும் தமது இடங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடுகின்றன. இதற்கான அனுமதியை கொழும்பில் உள்ள இலங்கைத் துறைமுகங்கள் அதிகாரசபை வழங்கியுள்ளது.

இதனால் மயிலிட்டி மீனவர்கள் பாதிக்கப்படுவதாகக் கூறியும் இதுவரை நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை. கொழும்பு நிா்வாகம் நேரடியாகத் தலையிடுவதால் யாழ்ப்பாண செயலக அதிகாரிகளும் அமைதியாக உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

Mayilidy Fisherman-3
மயிலிட்டி மீனவர்களின் படகுகள் தரிப்பிடம்
Mayilidy Fisherman-4
வலையை சரிசெய்யும் மயிலிட்டி மீனவர்கள்
Mayilidy Fisherman-5
மயிலிட்டி துறைமுகத்தில் தரித்துநிக்கும் தென்பகுதி மீனவர்களின் படகுகள்
single photo single photo