இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் உள்ளக் குமுறல்

தமிழ் அரசியல் கட்சிகளுக்குத் தேர்தலில் மாத்திரமே அக்கறை

புறக்கணிக்கப்படுவதாக உறவினர்கள் கவலை
பதிப்பு: 2019 ஜூலை 30 20:44
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 30 22:05
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Disappeared
#Demonstration
#slomp
#ompsrilanka
#kilinochchi
#srilanka
#tamils
#lka
வடக்கு - கிழக்கு தாயகப் பகுதிகளிலும் கொழும்பு மற்றும் புறநகர்ப் பிரதேசங்களிலும் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பதினொரு மணியளவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்திவரும் நிலையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உறவினர்கள் தமது மனக்குமுறல்களை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் மீது குற்றம் சுமத்தினர். தமக்கு நீதி மாத்திரமே வேண்டுமெனக் கோசம் எழுப்பினர்.
 
மைத்திரி - ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அழுத்தமாகக் கூறினர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களைக் கைகளில் ஏந்தியவாறு பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அமைப்புகள், உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல பொது அமைப்புகளிடம் கடந்த பல வருடங்களாக முறையிட்டும் உரிய பதில் இல்லையென்றும் உறவினர்கள் வேதனைப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தினரின் முகாம்கள் இரகசிய முகாம்கள் போன்றவற்றை சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பார்வையிட வேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

தமது பிள்ளை உயிருடன் இருக்கிறாரெனத் தான் நம்புவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாய் ஒருவர் தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது பிள்ளைகளை நினைத்து பல தாய்மார் உயிரிழந்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை நினைத்து தொடர்ச்சியான கவலையோடும் வேதனையோடும் போராட்டம் நடத்துவதாகவும் ஆனால் இலங்கை அரசாங்கம் தங்களைப் புறக்கணிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை வெளியிட்டனர்.

தமிழ் அரசியல் பிரநிதிகள் மீதும் தமது கோபத்தை வெளிப்படுத்தினர். தேர்தலை மாத்திரம் இலக்காக் கொண்டு தமிழ்க் கட்சிகள் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினர்.