கிழக்கு மாகாணத்தின்

மட்டக்களப்பு - காத்தான்குடியில் வீடுவீடாகச் சென்று விபரங்களைச் சேகரிக்கும் பொலிஸார் - நெருக்கடியில் மக்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தொடரும் பதிவு நடவடிக்கை
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 02 11:41
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 11 20:06
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Batticaloa
#Srilanka
#slpolice
#Eastersundayattack
#lka
#tamils
#muslims
மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் கொழும்பிலிருந்து சென்றுள்ள இலங்கைப் பொலிஸார், வீடு வீடாகச் சென்று குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிப்பதாக தமிழ் நெற் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி தொடக்கம் மண்முனைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தமிழ் மக்களது வீடுகளுக்குச் செல்லும் பொலிஸார், குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான விபரங்களைச் சேகரிப்பதுடன், பொலிஸார் வீடுகளுக்குச் செல்லும்போது ஒவ்வொரு வீட்டுத் தலைவர்களும் வீட்டில் இருக்க வேண்டும் எனவும் அவர்களால் நிரப்பப்படும் விண்ணப்பத்தில் வீட்டுத் தலைவர்கள் கையொப்பமிட வேண்டும் எனவும் வலியுறுத்துவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளதாக தமிழ் நெற் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதன்போது பிரதானமாக, வீட்டில் உள்ள குடும்ப அங்கத்தவர்கள் அனைவரதும் தேசிய அடையாள அட்டையில் காணப்படும் அனைத்து விபரங்களும் பொலிஸாரால் பதிவுசெய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குலுக்குப் பின்னர் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பிரதேச செயலகம் மற்றும் கிராம அலுவலர்களின் ஊடாக பொது மக்களது விபரங்கள் திரட்டப்பட்டன.

இருந்தபோதிலும், பொலிஸாரின் தேவைக்காகவே இவ்வாறு குடும்ப அங்கத்தவர்கள் தொடர்பான பதிவு மேற்கொள்ளப்படுவதாக, பதிவு நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸார் தம்மிடம் குறிப்பிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் இது போன்ற பல நெருக்கடிகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ள நிலையில், முஸ்லிம் சமூகங்களை எல்லையாகக் கொண்ட தமிழ்க் கிராமங்களிலும் இத்தகைய பதிவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருவதனால், தமிழ் மக்கள் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை தொடர்வதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.