முல்லைத்தீவு

செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் வள்ளிபுனத்தில் அனுட்டிப்பு

மாணவிகள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபி திறந்துவைப்பு
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 14 09:29
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 14 23:33
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Mullaituvu
#Sencholaimassacre
#tamils
#students
#srilanka
#lka
சிங்கள பேரினவாத அரசினால் செஞ்சோலை வளாகத்தின் மீது வான்குண்டுத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்ட 53 அப்பாவி மாணவிகளின் பதின்மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் இன்று அனுட்டிக்கப்பட்டுள்ளது. தலைமைத்துவப் பயிற்சிக்காக செஞ்சோலை வளாகத்தில் ஒன்றுகூடியிருந்த மாணவிகளை இலக்குவைத்து 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி காலை 07.05 அளவில் இலங்கை வான்படையின் விமானங்கள் நடத்திய வான்குண்டுத் தாக்குதலில் 53 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
 
இவ்வாறு கொல்லப்பட்ட மாணவிகளை நினைவுகூர்ந்து வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில், வள்ளிபுனம் - இடைக்காட்டு சந்தியில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், விமானக் குண்டுவீச்சில் இரண்டு பிள்ளைகளை இழந்த தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பொது திருவுருவப்படத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா பொதுச் சுடர் ஏற்றி வைத்ததுடன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் மலர்மாலை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளது திருவுருவப்படங்களுக்கு அவர்களது உறவினர்களால் சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவிகள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

வன்னிகுறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், உயிரிழந்த உறவுகளின் பெற்றோர்கள், பொதுமக்கள், இன உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள், என பலரும் கலந்து கொண்டதாக முல்லைத்தீவு செய்தியாளர் கூர்மை செய்தித்தளத்திற்கு தெரிவித்தார்.