இலங்கைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை - வேலுக்குமார் விளக்கம்

அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்க மனோ கணேசன் ஏற்பாடு?
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 20 23:21
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 22 10:54
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Politicalprisoners
#tamils
#ManoGanesan
#srilanka
#lka
இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் உறுதியளித்துள்ளதாக அரசியல் கைதியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார். கொழும்பு மகசீன் சிறைச்சாலைக்கு இன்று செவ்வாய்க்கிழமை சென்று தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்த வேலுக்குமார் இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுமெனவும் பொது மன்னிப்பு அடிப்படையில் அல்லது புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பிப் பின்னர் விடுதலை செய்வது குறித்து ஏனைய அமைச்சர்களோடும் பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அமைச்சர் மனோ கணேசனின் ஏற்பாட்டிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுக்குமார் அரசியல் கைதிகளிடம் கூறியுள்ளர்.

விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கடந்த மாதம் 14 ஆம் திகதி கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் 63 வயதான கனகசபை தேவதாசன் என்ற தமிழ் அரசியல் கைதி உண்ணாவிரம் இருந்தபோது அமைச்சர் மனோ கணேசன் சென்று பார்வையிட்டிருந்தார்.

இரண்டு வாரங்களில் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்து பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்விப்பதாக அமைச்சர் மனோ கணேசன் அப்போது உறுதியளித்திருந்தார்.

ஆனால் இதுவரையும் அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அதற்கான தாமதங்கள் குறித்து வேலுக்குமார் மூலமாக அமைச்சர் மனோ கணேசன் தகவல் அனுப்பியதாக அரசியல் கைதியொருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

கொழும்பு மகசீன், வெலிக்கடை, அனுராதபுரம் உள்ளிட்ட சிறைச்சாலைகளில் நூற்று இருபது தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.