வடமாகாணம்

வரட்சியால் கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடித் தொழில் பாதிப்பு

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்புகள் மேலும் தொடருகின்றன.
பதிப்பு: 2019 செப். 06 13:30
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: செப். 06 19:53
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#drought
#kilinochchi
#eelam
#tamil
#lka
வடமாகாணத்தில் தொடர்ச்சியாக நிலவும் கடும் வரட்சியினால் விவசாயச் செய்கைகளும் நன்னீர் மீன்பிடி நடவடிக்கைகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்குகின்றன. குறிப்பாகக் கிளிநொச்சியில் நிலவும் கடும் வரட்சியினால் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வரட்சி நிலை தொடருமானால் நன்னீர் மீன்பிடி முற்றாகப் பாதிக்கப்படுமென மீனவர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். கடந்தகாலங்களில் இவ்வாறு மிகவும் மோசமான பாதிப்புகள் ஏற்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு கடும் வரட்சி நிலவுவதால் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவக்குடும்பங்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மீனவர்கள் ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டவர்கள்.
 
ஆகவே வரட்சியால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் இந்த மீனவர்களுக்கு உதவியளிக்குமாறு உரிய அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திலும் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்துப் பதிவு செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறியுள்ளனர்.

அதேவேளை, தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக இரணைமடுக் குளத்தில் காணப்படும் முதலைகள் வெளியே வருவதனால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

வெளியிடங்களில் காணப்படும் முதலைகளைப் பிடித்து வந்து சில தீய சக்திகள் இரணைமடுக்குளத்திற்குள் விடுவதாகவும் இதனால் அருகிலுள்ள கிராமங்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றும் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் தெரிவிக்கின்றனர்.

வெளியில் இருந்து கொண்டுவரப்படும் முதலைகள் இரணைமடுக்குளத்திற்குள் விடப்படுகின்றமை தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளதாகவும் ஆனாலும் உரிய நடவடிக்கைகள் எதுவுமே எடுக்கப்படவில்லை என்றும் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.