வடமாகாணம் முல்லைத்தீவு

கேப்பாப்புலவு மக்களுக்குத் தொழிலில்லை- காணிகளைக் கையளிப்பது குறித்து உரையாடல்

இலங்கை இராணுவ அதிகாரிகள் சந்திப்பில் கலந்து கொண்டனர்- ஆளங்குளம் காணிகள் பற்றியும் ஆராய்வு
பதிப்பு: 2019 செப். 20 23:29
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: செப். 21 12:22
main photo main photo main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
#genocide
#humanrights
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவுப் பிரதேச மக்களின் ஐம்பத்தி ஒன்பது தசம் ஐந்து ஏக்கர் காணியை மீண்டும் பொதுமக்களிடம் கையளிப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல், இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் முல்லைத்தீவு துணுக்காய்ப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆளங்குளம் பகுதியில் இலங்கைப் படையினர் வசமுள்ள மக்களின் காணிகளைக் கையளிப்பது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடல் ஆராயப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. வளமுள்ள காணிகளைப் படையினர் தம்வசப்படுத்தியுள்ளதால் தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்வுக்குக் கஷ்டப்படுவதாக மக்கள் கூறியுள்ளனர்.
 
முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிஸ்கந்தராஜா, இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள், மாகாணக் காணி ஆணையாளர், உதவிப் பிரதேசச் செயலாளர் மற்றும் காணிகளைக் கையளிக்குமாறு வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் கேப்பாப்புலவு மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Mulllithivu
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது காணிகளைக் கையளிக்குமாறு வலியுறுத்திப் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமது அவலங்களைக் கூறியபோது எடுக்கப்பட்ட படம் இது. அதிகாரிகளும் படத்தில் காணப்படுகின்றனர். இலங்கைப் படையினர் அபகரித்து தம்வசப்படுத்தியுள்ள தமது பாரம்பரியக் காணிகள் வளமுள்ள பிரதேசங்கள் என்றும் அந்தக் காணிகளில் இருந்து கிடைக்கும் வருமானங்களைப் படையினரே பெற்றுக் கொள்வதாகவும் மக்கள் எடுத்துக் கூறினர். 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான பத்து ஆண்டுகள் வரை தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் அன்றாட வாழ்வுக்குக் கஷ;டப்படுவதாகவும், மீளக்குடியேறாமல் கொட்டில்களில் தொழில்களும் இல்லாமல் எத்தனை காலத்துக்கு வாழ முடியுமெனவும் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றிய உயர் அதிகாரிகளிடம் மக்கள் கேள்வி எழுப்பினர். இலங்கை இராணுவ அதிகாரிகளும் இதில் பங்குபற்றியிருந்தனர்.
right photo
முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றுப் பிரதேசச் செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்புலவு மக்கள் இலங்கைப் படையினர் அபகரித்துள்ள தமது காணிகளைக் கையளிக்குமாறு கோரி நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாகவும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் தொடர்ந்தும் தமது பாரம்பரியக் காணிகளை இலங்கைப் படையினர் தமது பாவனையில் வைத்திருப்பதால், விவசாயச் செய்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கலந்துரையாடலில் பங்குபற்றிய உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

உடனடியாகக் கையளிக்க வேண்டிய காணிகள் தொடர்பாக ஆளுநர் சுரேன் ராகவன, கலந்துரையாடலில் பங்குபற்றிய இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கினார்.

காணிகளைக் கையளிப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் குறிப்பிட்ட சில காணிகளை இலங்கைத் தேசிய பாதுகாப்புக் கருதி தற்போதைக்குக் கையளிக்க முடியாதெனவும் இராணுவ அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

எவ்வாறாயினும் கலந்துரையாடல் சுமுகமாக நிறைவடைந்துள்ளதாக ஆளுநர் சுரேன் ராகவன் கலந்துரையாடல் நிறைவடைந்த பின்னர் ஊடகவியளார்களிடம் கூறினார். அதேவேளை, காணிகள் கையளிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடருமென கேப்பாப்புலவு மக்களும் தெரிவித்துள்ளனர்.