உயிரிழந்த சர்ச்சைக்குரிய

பிக்குவின் உடலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் எரிக்க முடியாது- நீதிமன்றம்

நாளை திங்கட்கிழமை கட்டளை பிறப்பிக்கும் வரை தற்காலிகமாக நீதிமன்றம் தடையுத்தரவு
பதிப்பு: 2019 செப். 22 15:19
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 23 20:19
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#Humanrights
#mullaitivu
தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு பழைய செம்மலை நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்குரிய வளாகத்தின் ஒரு பகுதியை இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் அபகரித்து விகாரை ஒன்றை அமைத்துத் தங்கியிருந்த மேதாலங்கார கீர்த்தி (Medhalankara Thero) என்ற பௌத்த பிக்கு, புற்றுநோயால் உயிரிழந்துள்ள நிலையில், அவருடைய சடலத்தை குறித்த விகாரை வளாகத்துக்குள் தகனம் செய்ய முடியாதென முல்லைத்தீவு நீதிமன்றம் தற்காலிகமாகத் தடை விதித்துள்ளது. உயிரிழந்த பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்துக்குக் கொண்டுவந்து இறுதிக் கிரியைகளை நடத்த இலங்கைப் படையினருடன் பிக்குமார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் முல்லைத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.
 
அத்துடன் நீதிமன்றத்திற்கும் இந்த விவகாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் முல்லைத்தீவு நீதிமன்றப் பதில் நீதவான் எஸ்.சுதர்சன் நாளை திங்கட்கிழமை காலை வரை தற்காலிகமாகத் தடைவிதித்தார்.

Neeraviyadi
புற்றுநோயால் உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலுக்கு குருநாகல், அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் இருந்து பௌத்த சிங்கள மக்கள் அஞ்சலி செலுத்தச் சென்றபோது எடுக்கப்பட்ட படம் இது. முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திலும் வெளியிலும் இலங்கைப் படையினர் பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதையும் படத்தில் காணலாம். பிள்ளையார் ஆலய வளாகத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தே விகாரை கட்டப்பட்டுள்ளது. அதற்கு ரஜமகா விகாரை எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த விகாரையிலேயே உயிரிழந்த பௌத்த பிக்குவின் உடலும் வைக்கப்பட்டுள்ளது.
right photo
பிள்ளையார் ஆலய நிர்வாக உறுப்பினர்களையும் பலாத்காரமாகக் கட்டப்பட்டுள்ள விகாரையின் நிர்வாக உறுப்பினர்களையும் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பௌத்த பிக்குவின் உடலைத் தகனம் செய்வது குறித்து நீதிமன்றம் நாளை திங்கட்கிழமை கட்டளை ஒன்றைப் பிறப்பிக்கும் வரை உயிரிழந்த, குறித்த பௌத்த பிக்குவின் உடலை விகாரை வளாகத்தில் புதைக்கவோ எரிக்கவோ முடியாது என்றும் நீதவான் எஸ்.சுதர்சன் உத்தரவிட்டுள்ளார்.

உயிரிழந்த மேதாலங்கார கீர்த்தி என்ற பௌத்த பிக்குவின் உடல் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்துக் புதிதாகக் கட்டபப்பட்டுள்ள விகாரையில் வைக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்கள் கொழும்பில் இருந்து சென்ற பௌத்த சிங்கள மக்கள் பிக்குவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமிப்புச் செய்த உயிரிழந்த பௌத்த பிக்குவுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இன முறுகல் நிலையை ஏற்படுத்தாமல் தீர்வு காண வேண்டுமென்றும் நீதிமன்றம் கடந்த மே மாதம் ஆறாம் திகதி உத்திரவிட்டிருந்தது. ஆனால் உயிரிழந்த பௌத்த பிக்கு இந்தத் தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து கடந்த மாதம் வவுனியா மேல்நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.

வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் புற்றுநோயினால் குறித்த பௌத்த பிக்கு உயிரிழந்துள்ளார்.