இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியாதென்கிறார் மகிந்த

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என்றும் கூறுகின்றார்
பதிப்பு: 2019 செப். 28 08:39
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 29 02:27
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#SajithPremadasa
ஐக்கிய தேசியக் கட்சியி;ன் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாதென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டமை தொடர்பாக அம்பாந்தோட்டையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச, தனது சொந்தத் தேர்தல் தொகுதியான அம்பாந்தோட்டையிலேயே சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியாதென்றும் கூறினார். ஸ்ரீ;லங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச, தேர்தலில் தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்ச வெற்றி பெறுவது உறுதியெனக் கூறினார்.
 
இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் சஜித் பிரேமதாசவிடம் எந்தவொரு திட்டமும் இல்லை. இலங்கையின் இறைமை பிரிக்கப்படுவதை தமது கட்சி ஆதரிக்காது எனவும் மகிந்த ராஜபக்ச கூறினார்.

இலங்கையின் இறைமை பிரிக்கப்படுவதை தமது கட்சி ஆதரிக்காது எனவும் மகிந்த ராஜபக்ச கூறினார்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் பிரேமதாசவுக்கு கடும் எதிர்ப்புகள் உள்ளன. இந்த நிலையில் அவருடைய வெற்றி உறுதியற்றது. சஜித் பிரேமதாச மேலும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மகிந்த ராஜபக்ச கூறினார்.

இந்த நிலையில் அவருடைய வெற்றி உறுதியற்றது. சஜித் பிரேமதாச மேலும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் மகிந்த ராஜபக்ச கூறினார். அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியோடு இணைந்து செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்த முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்கான பேச்சுக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை, சஜித் பிரேமதாச மீது அதிருப்தியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும் தங்கள் அரசியல் அணியில் இணைப்பதற்கும் ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் ஆறாம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியெனப்படும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கா மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.