கிழக்கு மாகாணம்

அம்பாறையில் முஸ்லிம் பகுதிகளில் இராணுவம் தேடுதல்

செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்குத் தடை
பதிப்பு: 2019 செப். 28 23:01
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: செப். 30 03:45
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#Slmilitary
#eastersunday
#attack
ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொழும்பு. மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னரான சூழலில், இலங்கைத் தீவில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் இலங்கைப் படையினர் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் பலர் விடுதலை செய்யப்பட்டபோதும் மேலும் பலர் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இலங்கை இராணுவத்தினர் திடீரெனத் தேடுதல், சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
 
சுற்றிவளைத்துத் தேடுதல் இடம்பெற்றபோது அது பற்றிய செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இரகசியத் தகவல் அடிப்படையில் தேடுதல். சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாகக் கூறப்பட்டது.

Ampara-28
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடி மற்றும் தனியார் மரக்காலைகளில் ஸ்கானர் இயந்திரங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது எடுக்கப்பட்ட படம் இது. சுமார் மூன்று மணி நேரமாக இந்தத் தேடுதல். சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாகப் பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்தி;ற்கத் தெரிவித்தனர்.
right photo
ஆனால் ஆயுதங்களோ. தடையப் பொருட்களோ எதுவுமே கைப்பற்றப்படவில்லை என்று அம்பாறைப் பொலிஸார் தெரிவித்தனர். சுமார் ஐம்பது இராணுவத்தினர் மாலை நான்கு மணி முதல் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடி மற்றும் தனியார் மரக்காலைகளில் ஸ்கானர் இயந்திரங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த பிரதேசங்களில் சுமார் மூன்று மணி நேரத்தி;ற்கும் அதிகமாக போக்குவரத்துத் தடை செய்யப்பட்டிருந்தது. அன்றாடக் கடமைகளில் ஈடுபடுவோர் பாதிக்கப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்கவுள்ளதாக அறிவித்த நிலையில் இந்தத் தேடுதல். சோதனை நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.