தமிழர் தாயகம் வடமாகாணம்

கிளிநொச்சியில் ஈழத் தமிழர் பண்பாட்டுப் பெருவிழா

பதினைந்து உயர் விருதுகளும் வழங்கப்பட்டன
பதிப்பு: 2019 செப். 29 06:48
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: செப். 30 03:45
main photo main photo main photo main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamilheritage
#festival
வடமாகாணம் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஈழத் தமிழர் பண்பாட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது. கரைச்சிப் பிரதேச சபையினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பண்பாட்டுப் பெருவிழாவின் முதல் நிகழ்வாக கலாச்சார விழுமியங்களை எடுத்தியம்பும் பொம்மலாட்டம், மயில் ஆட்டம், பொய்கால் குதிரை, தமிழ் இண்ணியைம், பறை, சிலம்பாட்டம் தவில் இசை உள்ளிட்ட ஊர்வலத்துடன் தமிழ் மன்னர்களை பறைசாற்றும் வகையில் ஊர்தியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பண்பாட்டுப் பெருவிழாவைப் பார்வையிடுகின்றனர்.
 
ஈழத் தமிழர் பண்பாட்டுப் பெருவிழாவின் முதல் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் வடமாகாண உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

கரைச்சிப் பிரதேச சபைத் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் ஈழத் தமிழர் பண்பாட்டுப் பெருவிழா நேற்றுச் சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு கிளிநொச்சிப் பிள்ளையார் ஆலயம் முன்பாக ஆரம்பமாகியது. பின்னர் ஐந்து மணிக்குப் பசுமைப் பூங்காவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சிறப்பு மண்டபத்தில் இடம்பெற்று, நள்ளிரவு பதினொரு மணிக்கு நிறைவடைந்தது.

மங்கள விளக்கேற்றல்
வடமாகாணம் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் ஈழத் தமிழர் பண்பாட்டுப் பெருவிழா வெள்ளிக்கிழமை ஆரம்பமானபோது சைவ, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருமார் மங்கள விளக்கேற்றினர். கிளிநொச்சியில் உள்ள இஸ்லாமிய மௌவி ஒருவர் மங்கள விளக்கேற்றியபோது எடுக்கப்பட்ட படம் இது.

அழிந்துவரும் தமிழர் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையிலும், அவற்றை வளர்க்கும் நோக்குடனும் இந்தப் பண்பாட்டுப் பெருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஏற்பாட்டுக்குழு கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்திருந்தது.

குறித்த நிகழ்வின் இரண்டாம் நிகழ்வான நேற்றுச் சனிக்கிழமை பாரம்பரிய கலை நிகழ்வுகள் மற்றும், நாடகம், கவியரங்கம், பண்பாட்டை எடுத்தியம்பும் நாடகம் ஆகியன இடம்பெறன.

ஈழத் தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தி கலைச் சேவைபுரிந்த பதினைந்து பேருக்கு அதி உயர் விருதுகளும் வழங்கப்படவுள்ளன. சிறப்புக்குழு ஒன்று விருது வழங்கப்படவுள்ள பதினைந்து பேரையும் தெரிவு செய்திருந்தது.