இலங்கை ஜனாதிபதித் தேர்தலில்

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க போட்டியிடுகிறார்

தேசிய மக்கள் இயக்கம் இன்று அறிவிப்பு
பதிப்பு: 2019 செப். 29 22:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 30 03:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#Maheshsenanayke
இலங்கையின் இராணுவத் தளபதியாக இருந்து கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் மகேஸ் சேனநாயக்கா போட்டியிடுகிறார். இது தொடர்பாக கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சுகதாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாட்டில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த பிக்குமார், சிங்கள சிவில் அமைப்புகள், சிங்களச் சட்டத்தரணிகள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகளை உள்ளடக்கிய தேசிய மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாடு இன்று முதன் முதலாக நடைபெற்றது.
 
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மகேஸ் சேனநாயக்கா போட்டியிடுவாரென தேசிய மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் காமின் நந்த குணவர்தன, அறிவித்தார்.

பிரதான சிங்கள அரசியல் கட்சிகளை இனிமேலும் நம்ப முடியாதெனவும் மக்கள் சார்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் இயக்கம் போட்டியிடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் முன்னாள் கணக்காய்வாளர் காமினி விஜேசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் முகாமையாளர் டாக்டர் அனுரகுமார உள்ளிட்ட பேராசிரியர்கள், நிபுணர்கள், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள், கலைஞர்கள், சிவில் அமைப்பு அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் பெருமளவு பௌத்த பிக்குமாரும் பங்குபற்றியிரு்ந்தனர்.

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க போட்டியிடுவாரென முன்னர் செய்திகள் வெளியானபோது அவர் அதனை மறுத்திரு்ந்தார்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ராணுவத்தளபதியாகப் பதவி வகித்திருந்த சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.