கிழக்கு மாகாணம் அம்பாறை

நாவிதன்வெளி முஸ்லிம் பிரதேசத்தில் நிரந்தரச் சோதனைச் சாவடி

மூன்று நாட்களிவ் இரண்டு தடவைகள் தீவிர சோதனை, தேடுதல் நடவடிக்கைள்
பதிப்பு: 2019 செப். 30 18:54
புலம்: அம்பாறை, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 01 20:49
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#Slmilitary
#eastersunday
#attack
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்களில் தொடர்ச்சியாகத் தேடுதல் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அம்பாறையில் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் நிரந்தரச் சோதனைச் சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அம்பாறை மாவட்டதில் சாய்ந்தமருது, கல்முனை ஆகிய பிரதேசங்களில் தேடுதல். சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட இலங்கை இராணுவம், இன்று திங்கட்கிழமை நாவிதன்வெளியில் நிரந்தரச் சோதனைச் சாவடி ஒன்றை அமைத்துள்ளதாகப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.
 
இன்று திங்கட்கிழமை நண்பகல் திடீரென உழவு இயந்திரத்தில் வந்த சுமார் இருபதுக்கும் அதிகமான இராணுவத்தினர் நாவிதன்வெளிப் பிரதேசச் செயலகத்திற்கு அருகே உள்ள சவளக்கடைச் சந்தியில் நிரந்தர சோதனைச் சாவடியை அமைத்துள்ளனர்.

சோதனைச் சாவடியை அமைத்துத் தேடுதல் நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டனர். அத்துடன் கனரக இராணுவ வாகனம் ஒன்றில் வந்த சுமார் நாற்பதுக்கும் அதிகமான இராணுவத்தினர் சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

சாய்ந்தமருது அல் ஹிலால் வீதியில் அமைந்துள்ள வீடுகளுக்கு சென்ற இராணுவத்தினர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மையவாடியில் தேடுதல் நடத்தினர். வீதியால் சென்ற மக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அம்பாறையில் கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது தடவையாகவும் பாரிய தேடுதல், சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது நாவிதன்வெளியில் நிரந்தர சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.