வடமாகாணத்தில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றம்

சவுதி அரேபிய நிதியில் கிளிநொச்சியில் பள்ளிவாசல் திறப்பு

சவுதி அரேபியப் பிரதிநிதிகளும் பங்கேற்பு
பதிப்பு: 2019 ஒக். 04 22:40
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 05 01:33
main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#muslims
போரினால் வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீளவும் குடியமர்ந்து வரும் நிலையில், தமது பிரதேசங்களில் இருந்த பள்ளிவாசல்களையும் செப்பனிட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சிப் பிரதேசங்களில் குடியமரும் முஸ்லிம் மக்களுக்குரிய உதவிகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் கிளிநொச்சி நகரில் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று புதிதாக இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று பகல் 12.30க்கு இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் பழய கட்டடத்திற்குப் பின்புறமாக அமைந்துள்ள பள்ளிவாசல்2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் படிப்படியாக அபிவிருத்தி செய்யப்பட்டு இன்று புதிய பள்ளிவாசலாகத் திறக்கப்பட்டுள்ளது.
 

கிளிநொச்சி மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் வாழும் மிகக் குறைந்தளவு இஸ்லாமிய மக்கள் இந்தப் பள்ளிவாசலில் தொழுகைகளில் ஈடுபடுவர் என்று பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவிலிருந்து வருகை தந்த சிறப்புப் பிரதிநிதிகள் இந்தப் பள்ளிவாசலைத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் இஸ்லாமியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பள்ளிவாசல் புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கப்பட்டமை தொடர்பாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முஸ்லிம் அரசியல்வாதிகள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.