இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

இரண்டு தமிழர்கள் மூன்று முஸ்லிம் உட்பட 35 பேர் போட்டி

சஜித் பிரேமதாச கோட்டாபய ராஜபக்ச சந்திப்பு
பதிப்பு: 2019 ஒக். 07 23:01
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 09 09:30
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். வேட்பு மனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை முற்பகல் இடம்பெற்றது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து உரையாடினர். மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் இரண்டு தமிழ் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மகிந்த ராஜபக்சவின் சகோதரரான சமல் ராஜபக்ச, குமார் வெல்கம, ஜயந்த லியனகே, மஹிபால ஹேரத், பஷர் சேகு தாவூத் ஆகியார் கட்டுப் பணம் செலுத்தினாலும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை.
 
ரெலோ இயக்கத்தின் முக்கியஸ்த்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லா ஆகியோர் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, இன்று திங்கட்கிழமையில் இருந்து எதிர்வரும் ஏழு நாட்களுக்குப் பேரணிகள் எதுவும் நடத்த முடியாதென்று மகிந்த தேசப்பிரிய செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். தேர்தல் பிரச்சாரங்களின் போது கடுமையான விதிகள் கையாளப்படும் என்றும் மீறும் வேட்பாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முப்பத்து ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுவது இதுவே முதற்தடவையாகும். போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களின் விபரங்கள் வருமாறு

சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சி, கோத்தாபய ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுன, அனுரகுமார திசநாயக்க தேசிய மக்கள் சக்தி, றொகான் பல்லேவத்த ஜாதிக சங்வர்த்தன பெரமுன, மில்றோய் பெர்னான்டோ சுயேட்சை, ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தேசிய மக்கள் இயக்கம், சிறிபால அமரசிங்க சுயேட்சை, சரத் மனமேந்திர நவ சிங்கள உறுமய, சமரவீர வீரவன்னி சுயேட்சை, சமன் பிரசன்ன பெரேரா எமது மக்கள் சக்தி கட்சி, அனுருத்த பொல்கம்பொல சுயேட்சை, ஏஎஸ்பி லியனகே சிறிலங்கா தொழிலாளர் கட்சி, ஜயந்த கேதாகொட சுயேட்சை, துமிந்த நாகமுவ முன்னிலை சோசலிசக் கட்சி, அஜந்தா பெரெரா சிறிலங்கா சோசலிச கட்சி, சமன்சிறி ஹேரத் சுயேட்சை, அசோக வடிகமங்காவ சுயேட்சை, ஆரியவன்ச திசநாயக்க ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, வஜிரபானி விஜேசிறிவர்த்தன சோசலிச சமத்துவக் கட்சி, பத்தேகமகே நந்திமித்ர நவ சம சமாஜ கட்சி, வண. அபரகே புண்ணானந்த தேரர் சுயேட்சை, பியசிறி விஜேநாயக்க சுயேட்சை, அனுர டி சொய்சா ஜனநாயக தேசிய இயக்கம், ரஜீவ விஜேசிங்க சுயேட்சை, வண. பத்தரமுல்லே சீலாரத்ன தேரர் ஜனசத பெரமுன, இலியாஸ் இத்ரூஸ் முகமட் சுயேட்சை, அஜந்த டி சொய்சா ருகுணு மக்கள் முன்னணி, விஜித குமார கீர்த்திரத்ன சுயேட்சை, எம்.கே.சிவாஜிலிங்கம் சுயேட்சை, எம்எல்ஏஎம். ஹிஸ்புல்லா சுயேட்சை, பிரியந்த எதிரிசிங்க ஒக்கம வசியோ ஒக்கம ரஜவரு சவிதானய, நாமல் ராஜபக்ச தேசியங்களின் ஒற்றுமை இயக்கம், அகமட் ஹசன் முகமட் அலவி சுயேட்சை, குணபால திஸ்ஸகுட்டியாராச்சி சுயேட்சை, சுப்ரமணியம் குணரத்தினம் எமது தேசிய முன்னணி, சிறிதுங்க ஜயசூரிய ஐக்கிய சோசலிச முன்னணி