இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

கோட்டாபயவின் குடியுரிமைப் பிரச்சினை- மனுத் தாக்கல் செய்த இருவருக்கும் கொலை மிரட்டல்

வெள்ளை வான் கலாச்சாரம் வேண்டாமென்கிறார் பேராசிரியர் சந்திரகுப்த
பதிப்பு: 2019 ஒக். 09 10:10
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 09 23:10
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
#humanrights
இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமைச் சர்ச்சை தொடர்பாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த சட்டத்தரணி காமினி வியாங்கொட, (Gamini Viyangoda) பேராசிரியர் சந்ரகுப்த தேனுவர (Prof. Chandraguptha Thenuwara) ஆகியோருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜகபக்சவுக்கு எதிராக எழுத்தாணை மனுத்தாக்கல் (Certiorari writ) செய்த இருவருக்கு எதிராகவும் சமூக ஊடகங்கள் மூலமாக அவதூறு விளைவிப்பதாகவும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காமினி வியாங்கொட, சந்ரகுப்த தேனுவர ஆகிய இருவரும் நேரடியாகச் சென்று இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளனர்.
 
கொலை அச்சுறுத்தலை எதிர்கொள்வதானது வெள்ளை வாகனக் கலாசாரத்தை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும், அவ்வாறானதொரு நிலைமை மீண்டும் உருவாகுவதை தாம் விரும்பவில்லை எனவும் பேராசிரியர் சந்திரகுப்த ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை தொடர்பான பிரச்சினை தொடர்பாக இலங்கைப் பதில் பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூல முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

பின்னர் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் அந்த முறைப்பாடு விசாரணைக்காகக் கையளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மாதம் இரண்டாம், மூன்றாம் திகதிகளில் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு நான்காம் திகதி கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர் குழு தீர்ப்பு வழங்கியிருந்தது.

கோட்டாபய ராஜபக்ச இலங்கைக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்ட முறை சட்டத்திற்கு அமைவானதென்று நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இந்த நிலையிலேயே மனுவைத் தாக்கல் செய்த இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.