இலங்கை ஒ்ற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்

எல்பிட்டியப் பிரதேச சபையை மகிந்த அணி கைப்பற்றியுள்ளது

இருபத்து மூவாயிரத்து 72 வாக்குகளைப் பொற்று 17 ஆசனங்கள், ரணில் தரப்புக்கு ஏழு
பதிப்பு: 2019 ஒக். 11 22:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 18 11:02
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#elpitiya
#lka
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தென் பகுதியான காலி மாவட்டத்தில் உள்ள எல்பிட்டியப் பிரதேசச் சபையை மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜனப் பெரமுனக் கட்சி கைப்பற்றியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை தேர்தல் இடம்பெற்றது. முடிவுகள் இன்று இரவு வெளியாகின. முப்பத்து ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட எல்பிட்டியப் பிரதேச சபையை ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி இருபத்து மூவாயிரத்து 72 வாக்குகளைப் பொற்று 17 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
 
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பத்தாயிரத்து நூற்றிப் 13 வாக்குகளைப் பெற்று ஏழு ஆசனங்களையும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐயாயிரத்து 273 வாக்குகளைப் பெற்று மூன்று ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணியெனப்படும் ஜே.பி.வி இரண்டாயிரத்து 435 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

ஜனநாயகத் தேசிய ஐக்கிய முன்னணி முந்நூற்றுப் 10 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளதால் ஆசனங்களைக் கைப்பற்ற முடியவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எல்பிட்டியப் பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் நல்ல ஆரம்பம் என்று மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெறுவது உறுதியென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் இருநூறு சபைகளைக் கைப்பற்றி பொதுஜனப் பெரமுனக் கட்சி முன்னிலை வகித்திருந்தது.

வேட்பு மனுத் தாக்கல் நிராகரிக்கப்பட்டதால் எல்பிட்டியப் பிரதேச சபைக்கான தேர்தலுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் தேர்தலை நடத்துமாறு கடந்த யூ;ன் மாதம் இலங்கை உயர் நீதிமன்றம் இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.