தமிழர் தாயகம் வடமாகாணம் யாழ்ப்பாணம்

கொக்குவில் பிரம்படியில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட மக்களின் நினைவேந்தல்

பிரதேச மக்கள் ஏற்பாடு
பதிப்பு: 2019 ஒக். 12 23:03
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 13 20:35
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#indian
#army
இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி செய்யப்பட்ட பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அமைதிப்படை என்ற போர்வையில் வந்த இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் அதிகமான பொது மக்களைக் கொலை செய்த 32 ஆவது ஆண்டு நிறைவு இன்று சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. துப்பாக்கியால் சுட்டும், உயிருடன் வீதியிலும் ரயில் தண்டவாளத்திலும் குப்பறப் படுக்க வைத்துக் கவச வாகனங்களினால் நசித்தும் மக்கள் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்ட மக்களைப் பிரதேச மக்கள் இன்று நினைவு கூர்ந்தனர்.
 
பிரதேச மக்களும் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். 1987 ஆம் ஆண்டு இந்திப் படையினரோடு போர் ஆரம்பிக்கப்பட்டு ஓக்டோபர் மாதம் பதினொராம் பன்னிரெண்டாம் திகதிகளில்; கொக்குவில் பிரம்படியில் முதன் முதலாக ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் மிக மோசமாகக் கொல்லப்பட்டனர்.

இந்திய இராணுவத்தின் முதலாவது தமிழ் இனப் படுகொலைச் சம்பவமாக கொக்குவில் பிரம்படிப் படுகொலை பதிவாகியிருந்தது. பிரம்படி சந்தியில் உயிரிழந்தவர்களின் நினைவாக சிறப்பு நினைவு தூபியும் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நினைவுத் தூபியின் முன் இன்று நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச சபை தலைவர் யாழ்.மாநகர உப தவிசாளர், சபை உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்தும் தீபங்கள் ஏற்றியும் மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.