கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமை விவகாரம்-

கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமைக்கு சிவில் அமைப்புகள் கண்டனம்

கோட்டாபயவின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தும் செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்க வேண்டுமெனவும் கோரிக்கை
பதிப்பு: 2019 ஒக். 14 16:37
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 14 21:55
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பாகக் கேள்வி எழுப்பிக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்த சிவில் சமூக செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொட ஆகிய இருவருக்கும் விடுக்கப்பட்ட உயிர் அச்சுறுத்தல் தொடர்பாகத் தனிநபர்கள் 165 பேரும் 21 மனித உரிமை மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் கையெழுத்திட்டு ஊடக அறிக்கையொன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளன. நீதிமன்றத் தீர்ப்பில் குறித்த மனு ரத்துச் செய்யப்பட்டபோதும் மனுவைத் தாக்கல் செய்த இருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
 
கடந்த ஐந்தாம் திகதி விடுக்கப்பட்ட இந்தக் கொலை அச்சுறுத்தல் தொடர்பாக கடந்த வாரம் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றும் செய்யயப்பட்டிருந்தது. பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொட ஆகியோர் நேரடியாகச் சென்று முறைப்பாட்டைச் செய்திருந்தனர்.

இந்த நிலையிலேயே இந்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. விரைவான விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்கள் இருவருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் இருந்து கோட்டாபய ராஜபக்சவின் ஆதரவானவர்கள் விலகியிருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச இலங்கைக் குடியுரிமையைப் பெற்ற முறை தொடர்பாகக் கேள்விக்கு உட்படுத்தி வழக் குத்தாக்கல் பேராசிரியர் சந்ரகுப்த தேநுவர, காமினி வெயங்கொட ஆகியோருக்கு விடுக்கப்பட்ட உயிரச்சுறுத்தல்கள், நீதித்துறைக்கு எதிரானது எனவும் நீதித்துறைச் செயற்பாட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்ட இலங்கைக் குடியுரிமை சட்டத்திற்கு அமைவானதென்றும் எனவே குறித்த மனுவை ரத்துச் செய்வதாகவும் லசந்த கோத்தகொட தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழு கடந்த நான்காம் திகதி வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியிருந்தது.