இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை அழைக்க முயற்சி- சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு

பிரதான கட்சிகளின் முடிவையடுத்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமெனத் தகவல்
பதிப்பு: 2019 ஒக். 27 23:21
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 28 00:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு இலட்சம் இலங்கை அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்த இரண்டு இலட்சம் அரச ஊழியர்களுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதியும் முதலாம் திகதியும் நடைபெறவுள்ளதாக இலங்கை அரசாங்கத்தின் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஜே.ஏ.எஸ்.பி.ஜயசிங்க தெரிவித்தார். வாக்கெண்ணும் பணிகளில் மாத்திரம் நாற்பத்து எட்டாயிரம் பேர் ஈடுபடவுள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களுக்கான நலன்புரிச் செயற்பாடுகளில் பத்தாயிரம்பேர் ஈடுபடவுள்ளதாகவும் ஜயசிங்க கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தேவை ஏற்படின் மேலதிகப் பணிகளுக்கான மேலும் அரச ஊழியர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர் எனவும் அவர் கூறினார்.
 
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே சுமார் எழுபதாயிரம் பொலிஸாரும் இலங்கை இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுவார்கள் என்று இலங்கைப் பாதுகாப்புச் செயலகம் அறிவித்துள்ளது.

இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டளைப்படியே பொலிஸாரும் இலங்கை இராணுவத்தினரும் செயற்படுவார்கள் என்றும் அரசியல் தலையீடுகள் இருக்காதென்றும் பாதுகாப்புச் செயலகம் கூறியுள்ளது. ஆனால் இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்படுவதாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி கூறியுள்ளது.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் ஆயிரத்து 835 முறைபாடுகள் கிடைத்துள்ளதாகச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் கண்காணிப்புப் பணியில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் பிரதான அரசியல் கட்சிகளின் வேண்டுகோள்களுக்கு அமைவாக வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வரவழைக்கப்படுவார்கள் எனவும் அதுபற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுமென்றும் ஆணைக்குழுத் தகவல்கள் கூறுகின்றன.