கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் தொடரும் மழையால் விவசாயச் செய்கைகள் பாதிப்பு

பாலங்கள் உரிய முறையில் புனரமைக்கப்படாமையினால் மக்களுக்குப் பெரும் சிரமம்
பதிப்பு: 2019 ஒக். 31 22:00
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 01 03:29
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் மழையுடன் கூடிய காலநிலையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். மாவட்டத்தின் பதின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாழ்நிலை பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களும் நீரில் முழ்கியுள்ளன. கோறளைப்பற்று தெற்கு கிரான், கோறளைப்பற்று, வவுணதீவு ஆகிய கமநலகேந்திர நிலையத்திற்குட்பட்ட நெற் செய்கை கண்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய பெரும்பாக அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் தெரிவிக்கின்றனர்.
 

கடந்த வருடம் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களினால் முன்மொழியப்பட்ட கிராமிய பாலம் புனரமைப்புத்திட்டத்திற்கு அமைவாக மாவட்டத்தில் 32 பாலங்கள் புனரமைப்புக்கான அனுமதி உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மழைக்காலங்களுக்கு முன்பாக தொடங்கப்படுமானால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள். கோறளைப்பற்று விவசாய கமநலகேந்திர நிலையத்திற்குட்பட்ட எரிக்கலகாட்டுப் பாலம் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தப்பாலம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலார் பிரிவில் உள்ள ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் குடியிருக்கும் பகுதிக்கு போக்குவரத்துக்கான பிரதான பாதையில் உள்ள பாலம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் மற்றும் பிரதி அமைச்சர் அமிர் அலி ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது.

தற்போது, இந்தபாலம் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மாவட்டத்தில் தொடரும் அதிக மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலியமாக அமைக்கப்பட்ட பாதை வெள்ள நீரினால் உடைபெடுத்துள்ளதால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதிக நீர் ஓடுவதினால் வேளாண்மை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மக்களின் போக்குவரத்தை சீர்செய்வதுடன், விவசாயிகளின் நன்மை கருதி மிக விரைவில் இப்பாலத்தை புனரமைத்துக் கொடுக்குமாறு மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.