இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

மீன் சின்னத்திற்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்- காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் கோரிக்கை

பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களை நிராகரிக்குமாறும் வலியுறுத்தல்
பதிப்பு: 2019 ஒக். 30 16:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 31 13:34
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் தொள்ளாயிரத்து 84ஆவது நாளாகவும் சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைப் படையினரால் கடத்தப்பட்டுக் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம், பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் மீது அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழ் இளைஞர் யுவதிகளைக் காணாமல் ஆக்கிவிட்டுச் சிங்கள வேட்பாளர்கள் எந்த முகத்தோடு வாக்குக் கேட்க வருகிறார்கள் என்றும் சங்க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே மீன் சின்னத்திற்கு வாக்களித்து சிங்கள வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும் என்றும் உறவினர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 
வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்கு முன்பாக தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்கள் சங்கம், இன்று புதன்கிழமை வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டது.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் சிங்கள ஆட்சியாளர்களை நிராகரி்ப்பதாகக் கூறியுள்ள சங்க உறுப்பினர்கள், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த கொள்கையோடு தமிழ் வேட்பாளரின் மீன் சின்னத்துக்கே வாக்களிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈழத் தமிழ் மக்களின் தொடர்ச்சியான அரசியல் விடுதலைக்கான போராட்டத்தின் நியாயத்தை சர்வதேசத்துக்கு எடுத்துக் காண்பிக்க இந்தத் தேர்தலில் அனைவரும் மீன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மீன் சின்னம் சுயேற்சையாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்திற்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, தமிழகம் திருச்சியில் கடந்த இருபத்து ஐந்தாம் திகதி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்து மரணமான சிறுவன் சுர்ஜித்திற்காகவும் நேற்றுச் செய்வாய்க்கிழமை நெடுங்கேணியில் இரண்டு குழந்தைகள் அகால மரணமடைந்தமைக்காகவும் அஞ்சலியும் செலுத்தியிருந்தார்கள்.