கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும்

எஸ்.பி.திஸாநாயக்காவுடன் வாக்குவாதப்பட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு- இருவர் காயம்

மெய்ப்பாதுகாவலர் இருவர் கைது
பதிப்பு: 2019 நவ. 07 10:02
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 08 03:32
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்து தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா கினிகத்தேனை பொல்பிட்டியப் பிரதேசத்தில் நேற்றுப் புதன்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் சென்று கொண்டிருந்தபோது அவரது வாகனத்தைச் சிலர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீதே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
 
எஸ்.பி.திஸாநாயக்காவுடன் வாக்குவாதப்பட்ட கும்பல் ஒன்றைக் கலைப்பதற்காகவே மெய்ப்பாதுகாவலா் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

காயமடைந்த இரண்டு பொதுமக்களும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுவரை ஆயிரத்தி 340 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கூறியிருந்த நிலையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எஸ்.பி.திஸாநாயக்காவின் வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் என சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய திஸாநாயக்காவின் மெய்ப்பாதுகாவலர் இருவர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர கொழும்பில் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

எஸ்.பி.திஸாநாயக்கா, ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.