இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த இந்திய அமைச்சர்

சமகால அரசியல் நிலைமைகள் குறித்து இருவரும் உரையாடியதாகத் தகவல்
பதிப்பு: 2019 நவ. 11 15:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 12 02:45
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#ranilwickremesinghe
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் வேட்;பாளர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனம், மற்றும் பிரச்சார மேடைகளில் பேசப்படும் விடயங்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்தியத் தூதரகங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. பிரதான வேட்பாளர்களின் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களோடும் அவ்வப்போது சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களின் மன நிலை எவ்வாறு இருக்கின்றது என்பதையும் இவர்கள் அறிந்து வருகின்றனர். இவ்வாறனதொரு நிலையில் இந்தியாவின் சட்டம் ஒழுங்கு, நீதி மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.
 
பொதுநலவாய நாடுகளின் நீதியமைச்சர்களுக்கு இடையிலான மாநாடு கொழும்பில் நடைபெற்றபோது அதில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருவரும் பேசியதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சென்ற வியாழக்கிழமை மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையிலும் தொழில்நுட்ப சேவைகள், சட்டம் சம்பந்தப்பட்ட பரஸ்பர உடன்பாடுகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியொருவர் கூறினார்.

அதேவேளை, ஸ்ரீ;லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலரை கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசியுள்ளனர்.

பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களில் பேசப்படும் இந்தியா தொடர்பான நிலைப்பாடுகள் பற்றி கொழும்புக்கு வருகை தந்துள்ள இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்து வருவதாக சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.