இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

ஒற்றையாட்சியின் முக்கியத்துவம் குறித்து மகாநாயக்கத் தேரர்களுக்கு விளக்கம்- பாட்டாலி சம்பிக்க ரணவக்க

தேர்தல் விஞ்ஞாபனத்தின் பதினாறாம் பக்கத்தில் விபரமாக இருப்பதாகவும் கூறுகிறார்
பதிப்பு: 2019 நவ. 12 22:42
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 28 22:06
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#SajithPremadasa
ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் பதினாறாம் பக்கத்தில் இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை பாதுகாக்கும் அம்சம் இருப்பதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கண்டி மகாசங்கத்தினருக்கு விளக்கமளித்துள்ளார். சஜித் பிரேமதாச விபரமான கடிதம் ஒன்றை மகாநாயக்கத் தேரர்களுக்கு எழுதியுள்ளதாக அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் ஒற்றையாட்சி பற்றிக் கூறப்படவில்லையென சிலர் வந்திகளைப் பரப்பியுள்ளனர்.
 
இவ்வாறான வதந்திகள் தொடர்பாக மாகாநாயக்கத் தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கண்டியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

விளக்கமளித்து மகாசங்கத்தினருக்கு எழுதப்பட்ட கடிதத்தை இன்று செவ்வாய்க்கிழமை நேரடியாகச் சென்று கையளித்து மேலும் விளக்கமளித்துள்ளதாகவும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராகப் பொய்யான பிரச்சாரங்களை சிலர் மேற்கொண்டு வருவதாகவும் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதின்மூன்று அம்சக் கோரிக்கை அடங்கிய ஆவணத்தை சஜித் பிரேமதாச பெற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கோரிக்கைகளை ஏற்கவும் முடியாதென்று பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் (Millennium Challenge Cooperation) (MCC) 480 மில்லியன் டொலர் நிதியை வழங்க முன் வந்துள்ளது.

ஆனால் அது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் இதுவரை கைச்சாத்திடப்படவில்லை என்றும் கூறிய அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க, சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வந்த பின்னர் சர்வதேச உடன்படிக்கைகள் எதிலும் கைச்சாத்திடப்படமாட்டததென்றும் கூறினார்.