இலங்கை ஒற்றையாட்சி ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில்

கொழும்பு உள்ளிட்ட சிங்களப் பிரதேசங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்களிப்பு

யாழ்ப்பாணத்தில் 66 தசம் ஐந்து வீதம் வன்னித் தொகுதியி்ல் 73 சதவீதம்
பதிப்பு: 2019 நவ. 16 22:21
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 17 00:05
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
#SajithPremadasa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது வடக்குக் கிழக்கு மாகாணங்களில் திருகோணமலையில் மாத்திரம் எண்பத்து மூன்று சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணம் 66 சதவிதம், கிளிநொச்சி 73 சதவீதம், மட்டக்களப்பு 75 சதவீதம், அம்பாறை 80 சதவீதம், முல்லைத்தீவு, வவுனியா மன்னார் உள்ளிட்ட வன்னித் தேர்தல் தொகுதியி்ல் 73 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கொழும்பில் 75 சதவீதம் வாக்குகள், கம்பஹாத் தொகுதியில் 80 சதவீதமும் மாத்தளை, மாத்தறை ஆகிய தேர்தல் தொகுதிகளில் 79 சதவீத வாக்களிப்பும் குருநாகல தேர்தல் தொகுதியில் 82 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
 
இருபத்து இரண்டு தேர்தல் தொகுதிகளிலும் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைவிட சில பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் அதிகரித்தும் வேறு சில பிரதேசங்களில் குறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அட்டவணை
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஒவ்வொரு தேர்தல் தொகுதிகளிலும் பெறப்பட்ட வாக்களிப்பு வீதங்களும் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பெறப்பட்ட வாக்களிப்பு வீதங்களும் இந்த அட்டவணையில் தரப்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் கடந்த தேர்தலில் கூடுதலான வாக்களிப்பு விதமும் இந்த முறை தேர்தலில் சில இடங்களில் குறைந்தளவும் வேறு சில இடங்களில் அதிகமாகவும் வாக்களிப்பு வீதம் அமைந்துள்ளதை இந்த அட்டவணை காண்பிக்கப்படுகின்றது. சிவப்பு நிறம் குறைவடைந்ததையும் பச்சை நிறம் அதிகரித்துள்ளதையும் குறிக்கும்
அனேகமான சிங்களப் பிரதேசங்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. இரத்னபுர தொகுதியில் 84 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பிரதான வேட்பாளர்களுக்கிடையே நிலவிய கடுமையான போட்டியினால் வாக்களிப்பு வீதம் சில தொகுதிகளில் அதிகரித்திருக்கலாமென அவதானிகள் கருதுகின்றனர்.

1982 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அதன் தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்தன 52.91 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார். 1988 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாச 50.43 சதவீத வாக்குகளை மயிரிழையில் பெற்றிருந்தார்.

1994 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன மக்கள் முன்னணியின் சார்பில் சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க 62.28 சதவீதம் பெற்று இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் சாதனை படைத்திருந்தார்.

1999 ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகப் போட்டியிட்டிருந்த சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க 51.12 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சார்பில் 2005 ஆம் ஆண்டு போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 50.29 சதவீத வாக்குகளைப் பெற்று மயிரிழையில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

2010 ஆம் ஆண்டும் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச 51 சதவீதத்தைப் பெற்றிருந்தார். 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிட்டிருந்த மைத்திரிபால சிறிசேன 51.28 சதவீதம் பெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியிருந்தார்.

2019ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று மாலை ஐந்து மணியோடு முடிவடைந்துள்ளது. தற்போது வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பித்துள்ளன. ஆயிரத்து நூற்றி 78 நிலையங்களில் வைத்து வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.