தடைகளையும் மீறி

யாழ்- கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள்

வடக்குக்- கிழக்குத் தாயகம் எங்கும் நிகழ்வுகள்- பெருமளவில் மக்கள் பங்கேற்பு
பதிப்பு: 2019 நவ. 27 20:54
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: நவ. 29 03:34
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் இன்று புதன்கிழமை நடைபெற்றன. பெருமளவு மக்கள் நிகழ்வில் பங்குபற்றி மாவீரர்களை நினைவுகூர்ந்தனர். மக்கள் தேசமாக எழுந்து மாவீரர் நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தினுள் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபியில் மிகவும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது. மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலிக்க, அகவணக்கம் செலுத்தப்பட்டு, பொதுச் சுடரேற்றப்பட்டது.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை அடுத்து மாவீரர் பாடல் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் ஈகச் சுடர்களையேற்றி அஞ்சலி செய்தனர்.

Kili
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் சுமார் ஆயிறாயிரம் பேர் கலந்துகொண்டனர். வணக்க நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்களில் ஒரு பகுதியினரைப் படத்தில் காணலாம்.

மாவீரர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர். இன்று புதன்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்லக் கூடாதென யாழ் பல்கலைக் கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி பேராசிரியர் கந்தசாமி அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

கொழும்பில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகங்களின் மானிய ஆணைக்குழுவின் உத்தரவுக்கு ஏற்பவே அவர் அந்த அறிக்கையை வெளியிட்டிருந்ததாக மாணவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். இன்று புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணியுடன் பல்கலைக்கழக வளாகத்துக்குள் எவரும் நிற்க வேண்டமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. முன்பக்க வாசல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன.

ஆனாலும் அந்தத் தடைகளை உடைத்துக் கொண்டு பிற்பகல் நான்கு மணிக்கு உள்ளே சென்ற மாணவர்கள் மாலை 6.05 மணிக்கு மணியோசை ஒலித்துப் பொதுச் சுடரை ஏற்றினர்.

இலங்கைப் படையினரும் பொலிஸாரும் பல்கலைக்கழக வாளாகத்துக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்தனர். ஆனாலும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை.

அதேவேளை, கிளிநொச்சி தேராவில் பிரதேசத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். பொதுச் சுடர் ஏற்றப்பட்டு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.