வடமாகாணம் முல்லைத்தீவு

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைப் படம் எடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது விசாரணை

பின் தொடர்ந்த இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார்
பதிப்பு: 2019 நவ. 28 20:07
புலம்: முல்லைத்தீவு ஈழம்
புதுப்பிப்பு: நவ. 29 03:32
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடமாகாணம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைப் படம் எடுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். முள்ளிவாய்கால் நினைவுத் தூபியை இன்று வியாழக்கிழமை படம் எடுத்த பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து சென்றபோது அவர்களைப் பின்தொடர்ந்த குற்றப் புலனாய்வுப் பொலிஸார், புதுக்குடியிருப்பு தேக்கம் காட்டுப்பகுதியில் வழிமறித்து விசாரணைக்கு உட்படுத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளே இன்று முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்குச் சென்றிருந்தனர்.
 
மாணவர்கள் நினைவுத் தூபியைப் படம் எடுப்பதாக முல்லைத்தீவுப் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததாகவும் அதனையடுத்து புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் அங்கு சென்று மாணவர்களை அவதானித்ததாகவும் கூறப்படுகின்றது.

மாணவர்களைப் பின்தொடர்ந்த குற்றப் புலனாய்வுப் பொலிஸார், மாணவர்கள் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிப்பதை அறிந்து கொண்டனர். இதனால் புதுக்குடியிருப்பு தேக்கம்மர காட்டுப்பகுதியில் வைத்து வழிமறித்து நீண்ட நேரம் விசாரணை செய்தனர்.

நீண்ட நேர விசாரணையின் பின்னர் மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி முடித்த நிலையில் பல்கலைக்கழக மாணவர்களை குற்றப் புலனாய்வுப் பொலிஸார் பின்தொடர்ந்து அவதானிப்பதாக மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முள்ளிவாய்;க்கால் பிரதேசத்திற்குச் செல்வதும் அங்குள்ள நினைவுத் தூபியைப் படம் எடுப்பதும் அன்றாட நிகழ்வாகும். ஆகவே படம் எடுத்ததாகக் கூறி மாணவர்கள் விசாரணை செய்யப்பட்டமை மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்தியமைக்கான எச்சரிக்கை என்றே யாழ் பல்கலைக்கழகக் கல்விச் சமூகம் கருதுகின்றது.