கொழும்பில்

சிங்களப் பெண் ஊடகவியலாளர் நான்கு மணிநேர விசாரணைக்குப் பின்னர் விடுதலை

கட்டுரை தொடர்பாக எழுத்துமூல அறிக்கை பெறப்பட்டமைக்கு ஊடக அமைப்புகள் கண்டனம்
பதிப்பு: 2019 நவ. 29 10:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 01 03:15
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#MediaFreedom
#Journalist
சிங்களப் பெண் ஊடகவியலாளர் துஷாரா விதாரன (Thushara Vitharana) கொழும்பில் உள்ள இலங்கைக் குற்றவியல் திணைக்களத்தின் நான்காம் மாடியில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை சுமார் நான்கு மணித்தியாலங்கள் விசாரணை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் ஊடக அதிகாரியாகச் செயற்பட்ட துஷாரா விதாரன theleader.lk இன் செய்தி வெளியீட்டிற்கும் பங்களிப்புச் செய்கிறார். Voiceetube.lk இன் இணைய ஆசிரியராகவும் துஷாரா விதாரன செயற்படுகிறார். ஊடகக் கருத்தரங்கு ஒன்றுக்காக சமீபத்தில் சீனாவுக்குச் சென்று திரும்பிய நிலையில் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
சிங்கள பொது அமைப்பு ஒன்று முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இவர் மீது விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் விசாரணை செய்யப்பட்டமைக்கான காரணங்கள் எதனையும் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கூறவில்லை. theleader.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்று தொடர்பாக துஷாரா விதாரனயிடம் எழுத்துமூல அறிக்கை ஒன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பெற்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட கம்பரெலிய நிதியுதவித் திட்டம் தொடர்பாக துஷாரா விதாரன ஊக்கப்படுத்தி எழுதியிருந்தார்.

இந்த விசாரணை தொடர்பாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. புதிய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தையும் ஊடக ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துஷாரா விதாரன எழுதிய கட்டுரை தொடர்பாக மூல அறிக்கை பெறப்பட்டமைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.