வடமாகாணம் யாழ்ப்பாணம் வலி வடக்கு

தையிட்டியில் பொதுமகனுக்குச் சொந்தமான காணியில் விகாரை

இராணுவத்தின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும் முயற்சியைத் தடுக்குமாறு கோரிக்கை
பதிப்பு: 2019 டிச. 03 20:08
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: டிச. 04 16:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
யாழ்ப்பாணம் வலி.வடக்குத் தையிட்டிப் பிரதேசத்தில் பொது மகன் ஒருவருக்குச் சொந்தமான காணி ஒன்றில் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தற்போது விகாரை கட்டுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். பொது மகனுக்குச் சொந்தமான காணியை அபகரித்து விகாரை கட்டுவதைச் சட்ட ரீதியில் தடுத்து நிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென வலி வடக்குப் பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சஜீவன் அழைப்பு விடுத்துள்ளார். மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் கொழும்பை மையப்படுத்திய இலங்கை அரச திணைக்களங்கள் சிலவற்றின் மூலமாக இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட புத்தர் சிலை வைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
 
தற்போது அந்த நடவடிக்கைகள் நேரடியாகவே இராணுவத்தின் ஒத்துழைப்புடன் பொது மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு புத்த விகாரைகள் கட்டுவதற்கான முயற்சிகள் இரவு பகலாக இடம்பெறுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் சமூக அக்கறை கொண்ட சட்டத்தரணிகளும், அரசியல் வாதிகளும் குறித்த விகாரை கட்டுவதற்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென எஸ்.சஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வலி.வடக்கு தையிட்டிப் பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு அங்கு புத்த விகாரை அமைக்க இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்துள்ளது. வலி வடக்குப் பிரதேச சபை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் இதுவரை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லையென சஜீவன் கூறுகிறார். ஆகவே பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைந்து இராணுவத்தினரின் இவ்வாறான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சஜீவன் கேட்டுள்ளார்.