இலங்கைத் தலைநகர் கொழும்பில்

கடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்டுள்ள தூதரக அதிகாரியை சிகிச்சைக்காக சுவிஸ் கொண்டு செல்ல அரசாங்கம் மறுப்பு

கடத்தப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லையென்கிறார் இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஸ்
பதிப்பு: 2019 டிச. 04 23:58
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 06 04:20
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#switzerland
#gotabayarajapaksa
கடத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ்லாந்துத் தூதரகப் பெண் அதிகாரியை மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையிலிருந்து சுவிஸிலாந்துக் கொண்டு செல்வதற்கு சுவிஸ்;லாந்துத் தூதரகம் கோரிய அனுமதியை மறுத்துவிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியை அவரது குடும்பத்துடன் சுவிஸ்லாந்துக்குக் கொண்டு செல்ல சுவிஸ்லாந்துத் தூதரகம் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால் குற்றப் புலனாய்வுப் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்காமல் அவர் இலங்கையை விட்டு வெளியே செல்ல முடியாதெனக் கூறியதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
 
தூதரக அதிகாரியைக் கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் விமானத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கும் சுவிஸ்லாந்துத் தூதரக அதிகாரிகள் முற்பட்டதாகவும் ஆனாலும் அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளதென்றும் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

சென்ற நவம்பர் 25 ஆம் திகதி சுவிஸ்லாந்துத் தூதரகப் பெண் அதிகாரி கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவம் பொய்யானது எனவும் கடத்தப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லையென்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் பெண் அதிகாரியிடம் இருந்தும் சுவிஸ்லாந்துத் துதுவரிடம் இருந்தும் இதுவரை அதிகாரபூர்வமான முறைப்பாடுகள் எதுவும் இலங்கை அரசாங்கத்துக்குக் கிடைக்கவில்லை.

சுவிஸ்லாந்துத் தூதுவர் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கிய மிகவும் குறைந்தளவு முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் எவரும் கடத்தப்பட்டமைக்கான ஆதாரங்கள் இல்லையென்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.