வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில்

ஈழத்து இசைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் இசைவிழா

தமிழிசைச் சிறப்பிதழும் வெளியிடப்படவுள்ளது- சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன
பதிப்பு: 2020 ஜன. 18 16:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 20 00:24
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
இலங்கைத் தலைநகர் கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் இசை விழா எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. மூன்று நாட்களும் மாலை ஐந்து மணிக்கு ஆரம்பமாகி இரவு எட்டு மணி வரை விழா நடைபெறவுள்ளது. பிரபலமான ஈழத்துச் சங்கீதக் கலைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ள இந்த நிகழ்வில் சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளன. முதல் நாள் அமர்வுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் ஆ.குகமூர்த்தி தலைமை தாங்கவுள்ளார். சங்கத்தின் இலக்கியக் குழுச் செயலாளர் மு.சி.ஸ்ரீதயாளன் வரவேற்புரை நிகழ்த்துவார்.
 
தமிழ்ப் பணியோடு ஈழத்து இசைக் கலைஞர்களையும் கௌரவித்து வரும் கொழும்புத் தமிழ் சங்கம் நடாத்தும் மூன்று நாள் இசை விழாவில் அனைவரையும் பங்குபற்றுமாறு சங்கத்தின் இலக்கியக் குழு அழைப்பு விடுத்துள்ளது

பின்னர் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் கலாநிதி க.ரகுவரன் தொடக்கவுரையாற்றுவார் அதன் பின்னர் சாதனையாளர் கௌரவம் நடைபெறும் கட்புல மற்றும் அரங்கேற்றுக்கலைகள் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி அருணந்தி ஆருரன் சாதனையாளர் கௌரவம் பெறவுள்ளார்.

செல்வி வைஷாலினி யோகராஜன், கலாநிதி அருணந்தி ஆருரன் ஆகியோரின் இசை அரங்கு இடம்பெறும். தமிழிசைச் சிறப்பிதழும் வெளியிடப்படவுள்ளது. சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வசந்தி தயாபரன் வெளியீட்டுரையை நிகழ்த்துவார்.

முதல் நாள் நிகழ்வை சங்கத்தின் பேரவை உறுப்பினர் பவானி முகுந்தன் தொகுத்து வழங்குவார் நன்றியுரையை சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் கதிரவேலு மகாதேவா நிகழ்த்துவார்.

இரண்டாம் நாள் நிகழ்வுக்கு பேராசிரியர் சோ. சந்திரசேகரம் தலைமை தாங்கவுள்ளார். சங்கத்தின் பேரவை உறுப்பினர் ரகுபதி பாலஸ்ரீதரன் வரவேற்புரை நிகழ்த்துவார். நிர்வாகக்குழு உறுப்பினர் சட்டத்தரணி ஜி.இராஜகுலேந்திரா தொடக்கவுரையாற்றுவார்.

தமிழிசைப் போட்டிக்கான பரிசளிப்பும் இடம்பெறும் அது பற்றிய அறிமுக உரையை தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி நிகழ்த்துவார்.

பின்னர் கொழும்பு வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய இசை ஆசிரியர் தாரணி ராஜ்குமாரின் இசை அரங்கு இடம்பெறும். தமிழிசைப் போட்டியில் முதற் பரிசு பெற்ற மாணவர்களின் இசை அளிக்கையும் நடைபெறும். பேரவை உறுப்பினர் சந்திரபவானி கமலதாஸ் நன்றியுரையாற்றுவார். சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் வளர்மதி சுமாதரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.

மூன்றாம் நாள் நிகழ்வில் பேராசிரியர் சபா ஜெயராசா தலைமை தாங்குவார். காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வரவேற்புரையை நிகழ்த்துவார். தொடக்கவுரையை பேராசிரியர் வ.மகேஸ்வரன் நிகழ்த்துவார்.

இந்த நிகழ்வில் தலைக்கோல் விருதும் வழங்கப்படவுள்ளது. கலைச்சுடர் சண்முகரத்தினம் சண்முகராகவன் இந்த விருதைப் பெறவுள்ளார். சங்கீதக் கலாவித்தகர் மருத்துவர் சாய்லட்சுமி லோகீஸ்வரன், இசைக்கலைமணி, கலைமாணி தி.கருணாகரன் ஆகியோரின் இசை அரங்கும் இடம்பெறவுள்ளது.

சங்கத்தின் பேரவை உறுப்பினர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார். இந்த மூன்று நாள் நிகழ்வுக்குமான நன்றியுரையை தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் மு.மனோகரன் நிகழ்த்துவார்.

இசைக் கலைமானி ச.திபாகரன், கலாவித்தகர் மதுரா பாலச்சந்திரன் வயலின் ஆகியோர் வயலின் இசையும் கலாவித்தகர் வை.வேனிலான், இணுவையூ சுப்பிரமணியம் கமலதாஸ் ஆகியோர் மிருதங்க இசையும் வழங்கவுள்ளனர். விஷாரத ரட்னம் ரட்ணதுரை, கருணாகரன் தஷானன் ஆகியோர் கடம்.

தமிழ்ப் பணியோடு ஈழத்து இசைக் கலைஞர்களையும் கௌரவித்து வரும் கொழும்புத் தமிழ் சங்கம் நடாத்தும் மூன்று நாள் இசை விழாவில் அனைவரையும் பங்குபற்றுமாறு சங்கத்தின் இலக்கியக் குழு அழைப்பு விடுத்துள்ளது.