மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள

கிழக்குப் பல்கலைக்கழக மாணவன் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடை நிறுத்தம்
பதிப்பு: 2020 ஜன. 22 18:58
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 24 01:44
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#Eastern
#university
தமிழ் பேசும் மக்களின் கிழக்கு மாகாணம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவு முதலாம் அரையாண்டில் கற்கும் செங்கலடி பிரதேச மாணவன் சிவகுமார் பிரவின் சிரேஷ்ட மாணவர்களால் இன்று புதன்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து தாக்கப்பட்டுக் காயமடைந்துள்ளார். தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை பகல் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதலாம் ஆண்டு மாணவர் இருவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியிருந்தது.
 
இந்த தாக்குதலில் முதலாம் ஆண்டு மாணவர்கள் இருவர் படுகாயமடைந்தனர் இதன்போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்காக சென்ற அம்புயூலன்ஸ் வண்டியை பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்நுழைய விடாமல் மாணவர்கள் தடுத்துள்ளனர்.

இதன் பின்னர் பல்கலைக்கழக பின்வழியால் அம்புயூலனஸ் சென்று படுகாயமடைந்த இரு மாணவரையும் ஏற்றிக் கொண்டு வளாகத்தை விட்டு வெளியேற விடாமல் தாக்குதல் மேற்கொண்ட மாணவர்கள் தடுத்தனர்.

அதன்பின்னர் காயப்பட்ட இரு மாணவர்களும் அம்புயூலனஸ் வாகனத்தில் ஏற்றி்ச் செல்லப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் கால வரையறை இன்றி இடை நிறுத்தப்பட்டுள்ளன.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் கல்வி நடவடிக்கைகளை மேற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியளித்து வரும் நிலையில், இவ்வாறான பகிடிவதைகளை தமிழ் மாணவர்கள் நிறுத்த வேண்டுமென கல்வியாளர்கள் கோரியுள்ளனர்.