இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரே வரவுசெலவுத் திட்டம்

முன்னதாக மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கவும் யோசனை
பதிப்பு: 2020 ஜன. 25 23:30
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 25 23:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்பட்வில்லை. கடந்த ஆண்டின் இறுதியில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய வரவு செலவுத் திட்டம் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலாவது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசியல் காரணங்களின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படாலம் இழுத்தடிக்கப்படுவதாக உள்ள்கத் தகவல்கள் கூறுகின்றன. மாச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஏப்பிரல் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் கூடுதல் பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்து வரவு செலவத் திட்டத்தைச் சமர்ப்பிக்க வேண்டுமென் ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ச கூறியுள்ளதாகக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனால் தேர்தலுக்கு முன்னர் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச முற்படுவதாகவும் ஆனாலும் அமைச்சர்கள் பலரும் அதற்கு உட்படுவதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் ஏப்பிரல் மாத இறுதியில் புதிய நாடாளுமன்றத்தை அமைத்து வரவு செலவத் திட்டத்தை உடனடியாகச் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் கோட்டாபய ராஜபக்ச தனக்கு நெருக்கமான உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

எனினும் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டியது நாடாளுமன்றச் சம்பிரதாயங்கள் என்று மகிந்த ராஜபக்ச கட்சியின் மூத்த அமைச்சர்களிடம் கூறியதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை. மாவட்டச் செயலகங்கள் மூலமாக ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உரிய குறைந்த பட்;ச நிதி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.