வடமாகாணம்

கிளிநொச்சி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விகாரைக் கோபுரத்தில் கலசம் வைக்கும் நிகழ்வு

சிங்கள மாணவர்களும் கொழும்பில் இருந்து சென்ற பௌத்த குருமாரும் பங்கேற்பு
பதிப்பு: 2020 ஜன. 27 13:02
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 30 22:09
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடமாகாணம் கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு அதன் கோபுரத்தில் பௌத்த கலசம் வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை 6.15க்கு இடம்பெற்றுள்ளது. அனைத்து சமயங்களுக்கும் சம அளவிலான உயரத்தைக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதற்கு ஒரு ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பௌத்த விகாரை மிகப் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்கள மாணவர்களின் எற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொழும்பில் இருந்து சென்ற பௌத்த குருமாரும் கலந்துகொண்டனர்.
 
2009 ஆம் ஆண்டு மே மாதத்தி;ற்குப் பின்னரான சூழலில் வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் புத்தர் சிலை வைப்பது, பௌத்த விகாரைகள் கட்டுவது போன்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் கிளிநொச்சியில் உள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்த்தில் பௌத்த விகாரை அவசர அவசரமாக அமைப்பதற்குரிய வசதிகளையும் உதவிகளையும் பௌத்த அமைப்புகள் செய்திருந்தன. அதேவேளை, சைவ ஆலயங்கள், இஸ்லாமியப் பள்ளிவாசல், கிறிஸ்த்தவ ஆலயங்கள் அமைக்கும் பணிகள் எதுவும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. பிள்ளையார் ஆலயம் ஒன்று சிறிய அளவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன் முழுமையான கட்டுமாணப்பணிகள் உரியவர்களினால் ஆரம்பிக்கப்படவில்லை. நிர்வாகமட்டத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக உரியவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். ஆனால் பௌத்த விகாரை துரிதமாகக் கட்டப்பட்டு இன்று கலசம் வைக்கும் நிகழ்வும் நடைபெற்று முடிவடைந்ததுள்ளன.