இலங்கை ஒற்றையாட்சி அரசின்

சுதந்திர தினத்தைப் பகிஸ்கரிக்கவும்- காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சங்கம்

வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசம் எங்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு
பதிப்பு: 2020 ஜன. 28 23:06
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 30 22:04
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி நடைபெறவுள்ள இலங்கை ஒற்றையாட்சி அரசின் எழுபத்து இரண்டாவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை பகிஸ்கரிக்குமாறு இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இறுதிப் போரில் இலங்கைப் படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள, கணவன்மார்; தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி அரசு இதுவரை கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் புதிதாகப் பதவியேற்றுள்ள கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்தி அரசாங்கம் சுதந்திர தினத்தைக் கொண்டத் தயார்படுத்தி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
 
அன்றைய தினம் வடக்குக் கிழக்குத் தாயக மக்கள் அனைவரும் சுதந்திர தினத்தைப் பகிஸ்கரித்து எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடக்கிலும், கிழக்கிலும் எதிர்ப்புப் போராட்டம் சமநேரத்தில் நடைபெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது பிள்ளைகள், கணவன்மார் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காரணம் என்றும் இந்த நிலையில் காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துள்ளதாக அவரால் எப்படிக் கூற முடியும் எனவும் சங்கத்தின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி கேள்வி எழுப்பினார்.