இலங்கை ஒற்றையாட்சி அரசின்

நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் சிங்கள அரசியல் கட்சிகள்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகத் தீர்மானம்
பதிப்பு: 2020 ஜன. 30 10:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 07 01:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடு முயற்சிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர். எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படுமென அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேற்று முன்தினம் காலிப் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கூறியிருந்தார். இதனையடுத்தே அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இறுதிவாரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதாக இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. ஆனாலும் திகதி அறிவிக்கப்படவில்லை.
 
அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக உருவாக்கப்படவுள்ள பொதுக் கூட்டணியின் தலைமைப் பதவி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்குவதென கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின்போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சி உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் வேட்பாளராகவும் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவாரென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை ஊடகங்களுக்கு அறிவிக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான உறுப்பினர்கள் பலர் இன்றைய கூட்டத்துக்குச் செல்லவில்லை என்றும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.